கரூர் கூட்டத்தில் விஜய் ஜனநாயகன் ஷூட்டிங்? அதிர்ச்சி கிளப்பும் நக்கீரன் கோபால்! பிரத்யேக பேட்டி!
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது 41 பேர் பலியான சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாக நக்கீரன் கோபால் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார். நக்கீரன் கோபால் அளித்துள்ள பிரத்யேக பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கடுமையான நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தினை முன்வைத்து விஜய்யை பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. மேலும், நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய நிர்வாகிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

விஜய் பகல் 12 மணிக்கு கரூர் வருவார் என அறிவிக்கப்பட்டதால், காலை 10 மணியில் இருந்தே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். விஜய் மிகவும் தாமதமாக மாலை 7 மணிக்குதான் வந்தார். மேலும், ராங் ரூட்டில் விஜய் உள்ளிட்டோரின் வாகனங்கள் சென்றன. தொண்டர்களின் கூட்டத்துக்கு நடுவே வாகனத்தை நிறுத்தி, வேண்டுமென்றே காலதாமதம் செய்து, போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதச் செய்ததால், அசாதாரண சூழல் ஏற்பட்டது என எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூர் துயரச் சம்பவத்துக்கு விஜய்யின் தாமதமே காரணம் எனக் குற்றம்சாட்டப்படும் நிலையில், தவெகவினரோ, அரசு மீது குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் அரங்கில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பான விவாதம் தான் நடந்து வருகிறது.
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் 'நக்கீரன்' கோபால் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இந்தப் பேட்டியில், விஜய்யின் கரூர் கூட்டத்தில் 'ஜனநாயகன்' ஷூட்டிங் காட்சிகள் எடுக்கப்பட்டதாக நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சிகரமான தகவல்களோடு நக்கீரன் கோபால் நமக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி ஒன் இந்தியா தமிழ் யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது. நக்கீரன் கோபால் பேட்டியைக் காண:












Click it and Unblock the Notifications