ஸ்பாய்லர் விஜய்.. எடப்பாடியை கவிழ்த்த தவெக! சீமானின் ஒட்டுமொத்த கனவும் காலி? நக்கீரன் சர்வே ரிசல்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு யாருக்கு வெற்றி? என்ற தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை நக்கீரன் இதழ் வெளியிட்டு இருக்கிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 119 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருக்கும் நிலையில் ஏறக்குறைய 25 தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆச்சரியம் அளிக்கும் விதமாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆறு முதல் 21 சதவீத வாக்குகளை பெறும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதிமுகவும் திமுகவும் முன்னிலை பெற்றிருக்கும் தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடிக்கும் கட்சிகளின் வாக்கு வித்தியாசத்தை விட தவெக வாக்கு சதவீதம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை தேர்தல் களம் சென்று கொண்டிருக்கிறது. எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என திமுகவும் இரண்டாவது முறையாக ஆட்சியை இழக்கக்கூடாது என அதிமுகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

DMK

2026 சட்டமன்ற தேர்தல்

இந்த தேர்தலில் ஆட்சிக்கு எதிரான மனநிலை, சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து அதிமுக பிரச்சாரம் செய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு பெண்கள் நலத்திட்டங்கள் கடந்து ஐந்தாண்டு கால திமுக சாதனைகளை சொல்லி திமுக வாக்கு கேட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம்

இந்த இரு கட்சிகள் மட்டும் அல்லாது தமிழக வெற்றி கழகம் விஜயை மட்டுமே நம்பி களமிறங்கி இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் முன்னணி செய்தி நிறுவனமான நக்கீரன் 2026 தேர்தல் வெற்றி யாருக்கு என்ற மெகா சர்வே ரிசல்ட்டை வெளியிட்டு இருக்கிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 139 தொகுதிகளுக்கான ரிசல்ட் இந்த முதற்கட்ட சர்வேயில் இடம்பெற்றுள்ளது.

நக்கீரன் சர்வே

இரண்டாம் கட்ட சர்வே நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள ரிசல்ட் முடிவுகளின் படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கரூர், திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் திமுக முன்னிலையில் இருக்கிறது. வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம், ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக ஓரளவு செல்வாக்கு பெறுகிறது. சேலத்தில் மட்டுமே அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

திமுகவுக்கு ஆதரவு

கிட்டத்தட்ட நாற்பது சதவீதத்திற்கும் மேலாக வாக்கு திமுகவுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிகபட்சமாக கொளத்தூர், சேப்பாக்கத்தில் 58 சதவீத ஆதரவு திமுகவுக்கு இருப்பதாக நக்கீரன் சர்வே கூறுகிறது. அதே நேரத்தில் அதிமுக கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீத ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஓமலூர் , எடப்பாடி ஆகிய தொகுதிகளில் 48 சதவீதம் வரை அந்த கட்சிக்கு ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தவெக வாக்கு வங்கி

இதில் கவனிக்கத்தக்க வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்கு வங்கி ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கிறது. பெரும்பாலான தொகுதிகளில் 10 சதவீதத்துக்கு மேல் அந்த கட்சியின் வாக்கு இருக்கிறது. குறைந்தபட்சம் ஆறு முதல் அதிகபட்சம் 21 சதவீத வாக்குகள் அந்த கட்சிக்கு இருப்பதாக நக்கீரன் சர்வே சொல்கிறது. சென்னையில் சராசரியாக 6 சதவீத வாக்குகளும், திருவள்ளூரில் சராசரியாக ஆறு முதல் ஏழு சதவீத வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிக ஆதரவு

காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், விழுப்புரம், வேலூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்கு சதவீதம் 7 முதல் 15 சதவீதம் வரை சராசரியாக இருக்கிறது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் 21 சதவீத வாக்குகளை பெறும் என்கிறது நக்கீரன் சர்வே.

திமுகவுக்கு ஆதரவு

இந்த சர்வே முடிவுகளை வைத்து பார்க்கும் பொழுது அதிகபட்சமாக 47 முதல் 58 வரை திமுகவுக்கு ஆதரவு இருக்கிறது. அந்த தொகுதிகளில் அதிமுகவின் வாக்கி வங்கி 36 முதல் 32 சதவீதம் வரை இருக்கிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் தமிழக வெற்றி கழகம் தான். காரணம் அதிமுக பின்தங்கி இருக்கும் தொகுதிகளில் வெற்றி வாக்கு சதவீதத்தை விட தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்கு சதவீதம் அதிகமாக இருப்பதற்கு குறிப்பிடத்தக்கது.

ஸ்பாய்லர் விஜய்

உதாரணத்திற்கு சென்னை மதுரவாயல் தொகுதியில் 46 சதவீத வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கும் எனவும், 37 சதவீத வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கும் என்கிறது சர்வே. அதில் ஆறு சதவீத வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு இருக்கிறது. திருவொற்றியூரில் 46 சதவீத வாக்குகள் திமுகவுக்கும், 35 சதவீத வாக்குகள் அதிமுகவுக்கும் இருக்கிறது. இதில் 11% வித்தியாசம். தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்கு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான்

ஆனால் எதிர்பாராத வகையில் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சிக்கு வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும். மூன்று சதவீதம் சென்னையிலும், மற்ற தொகுதிகளில் வெறும் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும் என்கிறது நக்கீரன் சர்வே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+