சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்.. 30 தொகுதிகளில் கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக.. நக்கீரன் சர்வே!
சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், பிரபல நக்கீரன் வார இதழ் தரப்பில் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக தலைமையிலான கூட்டணி கிளீன் ஸ்வீப் அடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதே வாக்காளர்களின் விவாதமாக இருந்து வருகிறது. திமுக, அதிமுக மற்றும் நாதக ஆகிய கட்சிகளுடன் இம்முறை விஜய்யும் களமிறங்கி இருக்கிறார். விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் இளைஞர்கள், பெண்கள் கூட்டம் அதிகளவில் வருகிறது.

நக்கீரன் கருத்துக்கணிப்பு
இதனால் விஜய் யாரின் வாக்குகளை கைப்பற்ற போகிறார் என்பது கணிக்க முடியாத விஷயமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் நக்கீரன் வார இதழ் தரப்பில் சட்டசபைத் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் திமுக கூட்டணி கிளீன் ஸ்வீப் அடிக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
ஆர்கே நகர், பெரம்பூர், எழும்பூர் நிலவரம்
சென்னையில் ஆர்கே நகர் தொகுதியில் திமுக 48 சதவிகித வாக்குகளையும், அதிமுக 28 சதவிகித வாக்குகளையும், தவெக 13 சதவிகித வாக்குகளையும் கைப்பற்றும் என்றும், விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் திமுக 50% வாக்குகளையும், பாமக 24% வாக்குகளையும், தவெக 15% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் தொகுதியில் திமுக 45% வாக்குகளையும், அதிமுக 32% வாக்குகளையும், தவெக 14% வாக்குகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
ராயபுரம், கொளத்தூர் நிலவரம்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம் தொகுதியில் திமுக 44% வாக்குகளையும், அதிமுக 36% வாக்குகளையும், தவெக 12% வாக்குகளையும் பெறும் என்றும், திரு விக நகர் தொகுதியில் திமுக 47% வாக்குகளையும், அதிமுக 32% வாக்குகளையும், தவெக 11% வாக்குகளையும் கைப்பெற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் திமுக 58% வாக்குகளையும், அதிமுக 22% வாக்குகளையும், தவெக 11% வாக்குகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
சேப்பாக்கம், வில்லிவாக்கம் நிலவரம்
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக 47% வாக்குகளையும், அதிமுக 30% வாக்குகளையும், தவெக 13% வாக்குகளையும் பெறும் என்றும், துறைமுகம் தொகுதியில் திமுக 43% வாக்குகளையும், அதிமுக 35% வாக்குகளையும், தவெக 14% வாக்குகளையும் கைப்பற்றும் என்றும், சேப்பாக்கம் தொகுதியில் திமுக 58% வாக்குகளையும், அதிமுக 22% வாக்குகளையும், தவெக 12% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி நகர், விருகம்பாக்கம் நிலவரம்
தி நகர் தொகுதியில் திமுக 41% வாக்குகளையும், அதிமுக 39% வாக்குகளையும், தவெக 13% வாக்குகளையும் பெறும் என்றும், மயிலாப்பூர் தொகுதியில் திமுக 42% வாக்குகளையும், அதிமுக 40% வாக்குகளையும், தவெக 11% வாக்குகளையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் தொகுதியை பொறுத்தவரை திமுக 42% வாக்குகளையும், அதிமுக 37% வாக்குகளையும், தவெக 13% வாக்குகளையும் பெறும் என்று தெரிகிறது.
சைதாப்பேட்டை, வேளச்சேரி, அண்ணா நகர் நிலவரம்
சைதாப்பேட்டை தொகுதியில் திமுக 43%, அதிமுக 35%, தவெக 14% வாக்குகளையும், ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக 47%, அதிமுக 33%, தவெக 13% வாக்குகளையும், வேளச்சேரி தொகுதியில் திமுக 40%, அதிமுக 37%, தவெக 16% வாக்குகளையும், அண்ணா நகர் தொகுதியில் திமுக 41%, அதிமுக 36%, தவெக 14% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சென்னையின் 16 தொகுதிகளிலும் திமுக கிளீன் ஸ்வீப் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட நிலவரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் தொகுதியில் திமுக கூட்டணி 44%, அதிமுக கூட்டணி 35%, தவெக 13% வாக்குகளையும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக கூட்டணி 45%, அதிமுக கூட்டணி 37%, தவெக 10% வாக்குகளையும், உத்திரமேரூர் தொகுதியில் திமுக 44%, அதிமுக 40%, தவெக 8% வாக்குகளையும், காஞ்சிபுரம் தொகுதியில் திமுக 48%, அதிமுக 34%, தவெக 10% வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி, ஆவடி நிலவரம்
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக 47%, அதிமுக 39%, தவெக 8% வாக்குகளையும், பொன்னேரி தொகுதியில் திமுக கூட்டணி 45%, அதிமுக 40%, தவெக 7% வாக்குகளையும், ஆவடி தொகுதியில் திமுக 43%, அதிமுக 36%, தவெக 13% வாக்குகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
பூந்தமல்லி, திருத்தணி நிலவரம்
மதுரவாயல் தொகுதியில் திமுக 46%, அதிமுக 40%, தவெக 9% வாக்குகளையும், பூந்தமல்லி தொகுதியில் திமுக 45%, அதிமுக 40%, தவெக 7% வாக்குகளையும், திருவள்ளூர் தொகுதியில் திமுக 47%, அதிமுக 37%, தவெக 8% வாக்குகளையும், திருத்தணி தொகுதியில் திமுக 45%, அதிமுக 40%, தவெக 8% வாக்குகளையும், திருவொற்றியூர் தொகுதியில் திமுக 46%, அதிமுக 35%, தவெக 11% வாக்குகளை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மாதவரம், அம்பத்தூர் நிலவரம்
அதேபோல் மாதவரம் தொகுதியில் திமுக 44%, அதிமுக 35%, தவெக 12% வாக்குகளையும், அம்பத்தூர் தொகுதியில் திமுக 42%, அதிமுக 37%, தவெக 13% வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 3 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கொடி நாட்டும் என்று நக்கீரின் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications