"கணவர் முருகன் கூட இருக்க முடியலையே!" பிரஸ் மீட்டில் திடீரென பேச முடியாமல் கலங்கி நின்ற நளினி! சோகம்
சென்னை: சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து விடுதலையான நளினி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது திடீரென கலங்கி நின்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்தனர்.

30 ஆண்டுகளாக
சுமார் 30 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் இருந்த நிலையில், ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் அனுமதி அளிக்காத நிலையில், இது தொடர்பாகப் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனைக் கடந்த மே மாதம் விடுதலை செய்தது.

சிறை
அதைத் தொடர்ந்து பேரறிவாளனைப் போலவே தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி உள்ளிட்டோர் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மற்ற ஆறு பேரையும் விடுவிக்கச் சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி நேற்றைய தினம் ஆறு பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

பிரஸ் மீட்
சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நளினி விடுதலையான பின்பு நேற்று செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது முதலில் கடந்த 30 ஆண்டுகளாக மறக்காமல் எப்போதும் உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், தங்கள் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

பேச முடியவில்லை
அப்போது செய்தியாளர் ஒருவர் 30 ஆண்டுகள் கடந்த விடுதலையான பின்பும் கணவர் முருகனால் வீட்டிற்கு வர முடியாத சூழல் நிலவுகிறதே இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்டார். இந்த கேள்வியைக் கேட்டவுடன் நளினியால் சில நொடிகள் எதுவுமே பேச முடியவில்லை. அவரது கண்களில் பரிதவிப்பு அனைவராலும் பார்க்க முடிந்தது. கணவர் வீட்டிற்கு வர முடியாத சூழல் மகிழ்ச்சியானதாக இல்லை என்பது போலத் தலையசைத்தார்.

கலங்கி நின்றார்
இந்தக் கேள்வியால் சற்றே கலங்கிய அவர், பின்னர் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு, இன்று (ஞாயிற்றுக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும் அப்போது பல கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், இனிமேல் தான் கணவருக்காகவும் மகளுக்காகவும் ஒரு சாதாரண குடும்பத் தலைவியாக வாழப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

திருச்சி
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையிலிருந்த நளினியும் அவரது கணவர் முருகனும் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர். இருந்த போதிலும், அவர்களால் பொறுமையாக உட்கார்ந்து பேசக் கூட முடியவில்லை. ஏன்னெறால் முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களால் நளினியைப் போல உடனடியாக வீடு திரும்ப முடியாது. தமிழ்நாடு அரசு அவர்களைத் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்க முடிவு செய்துள்ளது.

சோகம்
இதற்காக நளினியை போலீஸ் வேனில் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அப்போது நளினி போலீஸ் வாகன ஜன்னலைப் பிடித்துக் கொண்டே கணவரைப் பார்த்துக் கண்கலங்கிய நின்றார். அதேபோல பிரஸ் மீட்டிலும் முருகன் பற்றிய கேள்விக்குப் பேச முடியாமல் நளினி சில நொடிகள் கலங்கி நின்றது படங்கள் பார்ப்போருக்குச் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications