"நல்லகண்ணுவை தேர்தலில் தோற்கடித்தது வருத்தம் தான்.." வருத்தப்பட்ட சிபி ராதாகிருஷ்ணன்!
சென்னை: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு நேற்று உடல்நலக்குறைவால் கலாமானர். அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர் கோவையில் ஒரு முறை தேர்தலில் போட்டியிட்டபோது, நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. அது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, நேற்று புதன்கிழமை பிற்பகல் 1:55 மணிக்குக் காலமானார்.

நல்லகண்ணு
அவரது உடல் இன்று அதே மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்படும். அவர் இறுதிச் சடங்குகளுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநில அரசு மரியாதை அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்த நல்லகண்ணு, பள்ளி மாணவராகவே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1943-ல் தனது 18-ஆவது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தடை செய்யப்பட்ட நிலையில், அன்றைய ஜவஹர்லால் நேரு அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, 1949ல் நல்லகண்ணு கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர், காவலில் இருந்தபோது ஒரு போலீஸ் அதிகாரியால் சித்திரவதை செய்யப்பட்டார். அப்போது நல்லகண்ணு முறுக்கு மீசை வைத்திருந்தார். அதைச் சிகரெட்டால் போலீசார் பொசுக்கியுள்ளனர். இதை நல்லகண்ணுவே ஒருமுறை நினைவு கூர்ந்தார். அதன் பிறகே சமூகத்தில் சமத்துவம் ஏற்படும் வரை மீசை வளர்க்க மாட்டேன் என்று அவர் முடிவு செய்துள்ளார்.
எளிமையின் அடையாளம்
மக்களோடு நெருக்கமான தலைவரான நல்லகண்ணு, தொடக்கத்திலிருந்தே சாதிப் பாகுபாட்டிற்கு எதிராகக் குரல் கொடுத்தார். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பல போராட்டங்களையும், உண்ணாவிரதங்களையும் ஏற்பாடு செய்தார். இந்தியா-சீனா போருக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி 1964 இரண்டாகப் பிளவுபட்ட போதிலும், நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தொடர்ந்தார்.
முதுமையிலும் ரயிலில் பொதுப் பெட்டியில் பயணித்து, அரசு வாடகை குடியிருப்பில் வசித்த நல்லகண்ணு, எளிமையின் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.. அவர் பல மக்கள் இயக்கங்களில் பங்கேற்றார்.. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் நடந்த சட்டவிரோத மணல் கொள்ளைக்கு எதிராகக் கடுமையாகப் போராடினார்.
மதச்சார்பின்மை
அதேபோல மதச்சார்பின்மையில் நல்லகண்ணு சமரசம் செய்ததில்லை. 1998 கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, லோக்சபா தேர்தல் நடந்தது. அதில் அவர் கோவை தொகுதியில் போட்டியிட்டார். அதில் அதிமுக- கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்த நிலையில், இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் தனது அவரது வாகனம் பிரச்சாரத்திற்குச் சென்றது. அப்போது அதிமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் இடம்பெற்று இருந்த நிலையில், அக்கட்சியின் கொடி அகற்றப்பட்டது.
இந்துக்கள் அதிகம் இருக்கும் பகுதிக்குள் செல்வதால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளே அந்தக் கொடியை அகற்றியதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், பிரச்சார வாகனத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக் கொடி இல்லாததைக் கவனித்த நல்லகண்ணு இது குறித்துக் கேட்டுள்ளார். அக்கட்சி நிர்வாகிகள் இது குறித்து விளக்கிய போது, "கூட்டணிக் கட்சியின் அடையாளமே முக்கியம்.. இப்படிச் செய்து தான் வெல்ல வேண்டும் என்றால் அந்த வெற்றியே எனக்குத் தேவையில்லை" எனக் கூறியுள்ளார்.
வேதனை
திராவிட இயக்கத் தலைவர்களுடன் நெருக்கமான உறவுகளை நல்லகண்ணு கொண்டிருந்தார். தனது நீண்ட அரசியல் பயணத்தில் ஒரே ஒருமுறைதான் தேர்தலில் போட்டியிட்டார். 1999 மக்களவைத் தேர்தலில் கோவையில் போட்டியிட்ட அவர், தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனால் தோற்கடிக்கப்பட்டார்.
வெற்றி சான்றிதழோடு நேராக நல்லகண்ணுவிடமே சென்று வாழ்த்து பெற்றார் ராதாகிருஷ்ணன். இது தமிழ்நாடு தேர்தலிலேயே நடக்காது ஒன்று. இது மட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்த ஒருவரை எதிர்த்துப் போட்டியிட்டது வருத்தமாக இருந்ததாக ராதாகிருஷ்ணனே பின்னாளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications