இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு 96வது பிறந்தநாள் - ஓபிஎஸ் வாழ்த்து
சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு இன்று தனது 96வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நீண்ட ஆயுளுடன் வாழ அவருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து கூறியுள்ளார
சென்னை: அரசியல் வாழ்வில் தூய்மையும், எளிமையும் , நேர்மையும் கொண்டவரும் சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு இன்று தனது 96வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நீண்ட ஆயுளுடன் வாழ அவருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து கூறியுள்ளார்.

பொதுவாழ்வில் உயர்ந்த குணமும் நேர்மை தவறா வழியில் வாழும் தலைவர்களின் வரிசை மிகவும் அரிதாகி விட்ட இந்த காலகட்டத்தில் தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து வரும் சுதந்திரபோராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு இன்று 96வது பிறந்தநாளாகும். அவரது பிறந்தநாளை கம்யூனிஸ்ட் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

நல்லக்கண்ணுவின் பிறந்தநாளை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான திரு.நல்லக்கண்ணு அவர்களுக்கு எனது உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.நல்லக்கண்ணு அவர்கள் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியோடு பல்லாண்டுகள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications