Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூப்பாடு போடும் குறிஞ்சி மலர் நடிகர் ஸ்டாலின்.. நமது அம்மா கடும் தாக்கு

மு.க.ஸ்டாலினை நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக மு.க.ஸ்டாலினை திட்டி தீர்த்தி எழுதியுள்ளது அதிமுகவின் அதிகார பூர்வ நாளேடான நமது அம்மா. "குறிஞ்சிமலர் நடிகர் ஸ்டாலின் போடுகிற கூப்பாடு ஒருநாளும் அரசியலுக்கு பயன்தராத அரை வேக்காடுதானே" என்று ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து அந்த கட்டுரையை வெளியிட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகம் மீது தங்கள் பொதுவான எதிர்ப்பினை தெரிவித்தாலும், உள்ளுக்குள் நம் தலைவர்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில்கூட, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது பலன் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் தமிழக நலன் கருதி தீர்மானத்தை ஆதரிக்கிறேன் என்றார் ஸ்டாலின். இந்நிலையில், அதிமுக அதிகார பூர்வ நாளேடான நமது அம்மாவில் ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்து எழுதி உள்ளார்கள். குத்தீட்டி என்ற பெயரில் இந்த கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் உள்ளதாவது:

பித்தலாட்டம்

பித்தலாட்டம்

"காவேரி தண்ணீரை தமிழகத்திற்கு கரைபுரள விடமாட்டோம் என கங்கணம் கட்டி செயல்படுவது கர்நாடகத்தை ஆளுகிற காங்கிரஸ் கூட்டணி அரசு என்றிருக்க, அந்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டே, மேகதாதுக்கு எதிராகப் போராட்டம் என்று தி.மு.க. நடத்துவது பித்தலாட்டத்தின் உச்சமல்லவா?

உண்ணாநோன்பு நாடகம்

உண்ணாநோன்பு நாடகம்

இப்படித்தான், இத்தாலி காங்கிரசோடு அன்றும் இணை பிரியாமல், மத்தியிலே கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டு, ஈழத்து இன அழிப்பை முன்னின்று நடத்துவதற்கு துணை போன திமுக மொத்தத்தையும் முடித்துவிட்டு தமிழினத்தை ஏமாற்ற அண்ணாவின் கல்லறையை, உண்ணா நோன்பு நாடகம் நடத்தும் மேடையாக்கி, உலகமே சிரிக்க மோசடி கூத்து நடத்தியது.

இரட்டை வேடம்

இரட்டை வேடம்

அவ்வழியிலேயே இப்போதும் தமிழின துரோக காங்கிரசோடு கூட்டணியை தொடர்ந்து கொண்டே, தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்றும் தரங்கெட்ட கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக செயல் தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். பாராளுமன்றத்திலே சிறு குறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதாக வாக்களித்துவிட்டு தமிழகத்து வணிகர்களை ஏமாற்ற இங்கே வந்து வால்மார்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியது.

மோசடி கூத்து

மோசடி கூத்து

அது போலவே, பொன் விளையும் பூமியை புல்லும் முளைக்காத பாலைவனமாக்கவும், விளைநிலங்களை வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கும் விபரீதங்கள் நிகழ்த்தவும், அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் அணி வகுத்த மீத்தேன், கெயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒரு பக்கம் ஒப்பந்தக் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு, மறுபக்கம் மீத்தேனுக்கு எதிர்ப்பு என்று கனிமொழியை அனுப்பி கண்டனக் கடிதம் கொடுப்பதுமாக, காலமெல்லாம் தி.மு.க. ஆடி வரும் மோசடி கூத்தில் மேலும் ஒன்றாகவே அமைகிறது மேகதாதுவுக்கு எதிராக தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டமும், ஆர்ப்பாட்டமும்.

துரோக இயக்கம்

துரோக இயக்கம்

மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டினால், அந்த காங்கிரஸ் கட்சியோடு வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஒரு வார்த்தை பேசுவதற்கு துப்பில்லாத தி.மு.க. இன்னும் எத்தனை நாடகங்கள் நடத்தினாலும், நற்றமிழ் பூமி அதனை ஒரு நாளும் நம்பாது... காரணம்... காவேரி கன்னடர்க்கு, கச்சத்தீவு சிங்களர்க்கு... முல்லையாறு கேரளர்க்கு... முள்ளிவாய்க்கால் மட்டுமே தமிழர்க்கு என்று இடஒதுக்கீடு பெற்றுத்தந்த துரோக இயக்கம் திமுக என்பதை ஒவ்வொரு தமிழனும் உதிரத்தில் அல்லவா எழுதி வைத்துள்ளான்.

குறிஞ்சி மலர்

குறிஞ்சி மலர்

அதனால் குறிஞ்சிமலர் நடிகர் ஸ்டாலின் போடுகிற கூப்பாடு ஒருநாளும் அரசியலுக்கு பயன்தராத அரை வேக்காடுதானே". இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+