நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கு.. இரண்டு மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை உரிமம் சஸ்பெண்ட்
சென்னை: நாமக்கல் கிட்னி திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு போலி சான்றிதழ் கொடுக்கப்பட்டதால், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, சிதார் மருத்துவமனை கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் முட்டை உற்பத்திக்கு பிரபலம். கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வரும் கிட்னி திருட்டு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகளவு உள்ளனர். விசைத்தறி தொழிலில் நலிந்து வருவதால், அவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கிட்னி திருட்டு
அப்பாவி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களிடம் கிட்னி திருடி விற்பதாக எழுந்துள்ள புகார் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அந்தப் பகுதியில் புரோக்கர்கள் இயங்கி மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்படுவதாகவும் தகவல் வெளியாகியது. இந்த அதிர்ச்சி வழக்கு குறித்து தினசரி பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.
மூளைச் சலவை
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகவே அந்தப் பகுதியில் கிட்னி திருட்டு அரங்கேறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர்களை மூளைச் சலவை செய்து, கிட்னியை பெற்று அவற்றை சட்டவிரோதமாக பல லட்ச ரூபாய்க்கு விற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர்களிடம் ஒரு கிட்னி சராசரியாக ரூ.6 லட்சம் என்று சொல்லி வெளியில் அதை பல மடங்கு அதிக விலை வைத்து விற்று வந்தனர்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் தலைமையில் 4 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
போலி சான்றிதழ்
அந்தக் குழு நாமக்கல் கிட்னி திருட்டு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அங்கீகார குழுவிடம் அனுமதிபெற வேண்டும். இதனிடையே திருட்டு நெட்வொர்க், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக போலி சான்றிதழ் கொடுத்து அரசை ஏமாற்றியது தெரியவந்தது
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.
அறிக்கை
இது குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, கடந்த 18.7.2025 தேதி தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவர். எஸ்.வினீத் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து எஸ்.வினீத், மருத்துவர். மீனாட்சிசுந்தரி, இணை இயக்குநர் (சட்டம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் மருத்துவர் ராஜ்மோகன், இணை இயக்குநர் - நலப்பணிகள் நாமக்கல் மருத்துவர். மாரிமுத்து, இணை இயக்குநர் - நலப்பணிகள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் சீத்தாராமன், காவல் துணை கண்காணிப்பாளர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை ஆகியோர் அடங்கிய குழு விசாரித்து வருகிறது.
அறிக்கை சமர்ப்பிப்பு
இந்தக் குழு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை மற்றும் திருச்சி சிதார் மருத்துவனை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை எஸ்.வினீத் அரசுக்கு சமர்பித்துள்ளார்.
அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, சிதார் மருத்துவனை ஆகிய மருத்துவமனைகளுக்கு மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994 பிரிவு 16 உட்பிரிவு (2) ன்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரால் ஆணை வழங்கப்பட்டுள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications