Nanganallur Murder: கணவர் குறித்து நங்கநல்லூர் நாகலட்சுமி சொன்னது என்ன? உமா ரியாஸ் வேதனை
சென்னை: சென்னை நங்கநல்லூர் நாகலட்சுமி கொலையுண்ட நிகழ்வு குறித்து நடிகை உமா ரியாஸ் கான் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும் அவரது கணவர் குறித்தும் குடும்பம் குறித்தும் நாகலட்சுமி பல்வேறு தகவல்களை பகிர்ந்ததாகவும் சொல்கிறார்.
இதுகுறித்து அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு ராஜியை (நாகலட்சுமியைத்தான் ராஜி என்கிறார்) ஒன்றரை மாதங்களாகத்தான் தெரியும். அவர் அண்மையில் பிரபலங்களை வைத்து ஒரு நிமிடத்தில் ரெடிமேட் சேலையை அணியும் ஒரு வீடியோ செய்திருந்தார்.

ரூ 1-க்கு சேலை என்றெல்லாம் விற்பனை செய்தார். அவரது கடைக்கு பல செலிபிரிட்டிகள் போய் வீடியோ எடுத்து பிரபலப்படுத்தினர். அது போல் நானும் அவரது கடைக்குச் சென்றேன். முதல் சந்திப்பிலேயே நாங்கள் மிகவும் Close ஆனோம்.
மிகவும் நல்ல பெண். அவ்வப்போது போன் செய்து சேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் என்பார். அண்மையில் கூட எனக்கு போன் செய்து, "Artificial jewellery விற்பனையைத் தொடங்க போகிறேன். உங்களுடைய சீரியல்கள், நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துங்கள்" என கேட்டார்.
4 நாட்களுக்கு முன்பு கூட எனக்கு ஒரு விழாவுக்கு கட்டிச் செல்ல புடவை வேண்டும் என அவரிடம் கேட்டிருந்தேன். அவரும் நிறைய கலெக்ஷன்களை அனுப்பியிருந்தார். நானும் பார்த்துவிட்டு சொல்வதாக கூறியிருந்தேன். அத்துடன் அவ்வளவுதான், அவர் இறந்துவிட்டார் என எனக்கு தகவல் வந்தது.
வாழ்க்கையை நம்மால் கணிக்கவே முடியலை. நேற்று பேசியவர் இன்று இல்லை எனும் போது கஷ்டமாக இருக்கிறது. அதிலும் கொடூரமான முறையில் இறந்தது இன்னும் வேதனையாக இருக்கிறது.
இதுவரை என்னிடம் அவரது இரு மகன்கள் குறித்து பேசியிருக்கிறார். மூத்த மகன் ஐபோன் கேட்கிறார், பிறகு வாங்கித் தருவதாக சொல்லியிருப்பதாக என்னிடம் தெரிவித்தார். அது போல் புதிய கார் வாங்கியிருப்பதாகவும் அதில் ரைடு போகலாம் என அழைத்திருந்தார்.
கணவர் குறித்து என்னிடம் அவர் எதையும் சொன்னதில்லை, "கணவருக்கு உடம்பு சரியில்லை, அவர் வேலைக்கு செல்வதில்லை, நான்தான் பிசினஸை பார்த்துக் கொள்கிறேன்" என்றுதான் பேசினார். வீட்டில் தாய் கொல்லப்பட்டு, தந்தை தூக்கில் தொங்கியதை பார்த்த ராஜியின் மகனுக்கு எப்படி இருந்திருக்கும்? என உமா ரியாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை நங்கநல்லூரில் பட்டுப்புடவை வியாபாரம் செய்து வந்த இன்ஸ்டா பிரபலம் நாகலட்சுமியை அவரது கணவர் வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications