விஜய் அழைத்தால் கண்டிப்பாக.. தவெகவில் பணியாற்றுவேன்.. வெளிப்படையாக அறிவித்த நாஞ்சில் சம்பத்!
சென்னை: திமுக என்னை அவமானப்படுத்துகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவெக அழைத்தால் செல்வேன். அவர்களுக்காக பேச செல்வேன். ஆனால் அரசியல் செய்ய வலிமை இல்லை. எனக்கு வயதாகிவிட்டது. இன்னொரு கட்சியில் இணைந்து பணிகளை செய்யும் அளவிற்கு வலிமை இல்லை ஆனால் விஜய் அழைத்தால் செல்வேன், திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஊடகங்களுக்கு திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அளித்துள்ள பேட்டியின் சாராம்சம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. விஜய் உடன் சேர்ந்து பயணிக்க விரும்புவதாகவும், அவர் அழைத்தால் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து செயலாற்ற விரும்புவதாகவும் கூட நாஞ்சில் சம்பத் தெரிவித்து உள்ளார்.
நாஞ்சில் சம்பத் - அதிமுக விமர்சனம்
அவர் தனது பேச்சில், அதிமுக தமிழ்நாட்டில் பலமாக இல்லை. அதிமுகவின் பலம் கடந்த சில தேர்தல்களாக குறைந்துவிட்டது. முக்கியமாக சில இடங்களில் அதிமுக 3ம் இடத்திற்கு சென்றுள்ளது. சில இடங்களில் 4ம் இடத்திற்கு சென்றுள்ளது. அந்த அளவிற்கு மோசமான நிலையில் அதிமுக உள்ளது. அப்படி இருக்க அதிமுக - திமுக இடையே எப்படி மோதல் இருக்கும். அதிமுக திமுகவை எதிர்க்கும் அளவிற்கு இல்லை. அதிமுகவிற்கு அவ்வளவு கள வலிமை இப்போது இல்லை. அதை செய்வதற்கான வலிமை அதிமுகவிடம் இல்லை.

இன்னொரு பக்கம் தவெக அதிமுகவை விட வலிமையாக உள்ளது. தவெக திமுகவை எதிர்க்கும் நிலையில் உள்ளது. திமுக என்னை மேடை பேச்சுக்கு அழைக்கும் நிலை இருந்தது. ஆனால் நான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக பேசுவதால் என்னை திமுக அழைக்கவில்லை. திமுகவிற்கு போட்டியே தவெகதான். பல தொகுதிகளில் திமுகவுக்கும், தவெகவுக்கும் நேரடி போட்டி. களநிலவரம் அப்படித்தான் இருக்கிறது. தவெகவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று நான் கூறியதால் திமுக என்னை ஒதுக்கி உள்ளது.
நாஞ்சில் சம்பத் - விஜய்க்கு ஆதரவு
திமுக என்னை அவமானப்படுத்துகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தவெக அழைத்தால் செல்வேன். அவர்களுக்காக பேச செல்வேன். ஆனால் அரசியல் செய்ய வலிமை இல்லை. எனக்கு வயதாகிவிட்டது. இன்னொரு கட்சியில் இணைந்து பணிகளை செய்யும் அளவிற்கு வலிமை இல்லை ஆனால் விஜய் அழைத்தால் செல்வேன். அவரின் கட்சிகளுக்காக செயல்படுவேன், பேசுவேன். ஆனால் திமுகவை எங்கும் எதிர்த்து பேச மாட்டேன். திமுக உடன் துவேசம் கொண்டு பேச மாட்டேன்.
விஜயை பாராட்டும் நாஞ்சில் சம்பத்
தவெகவின் கொள்கை பிடித்து இருக்கிறது. விஜய் அரசியலை தொடங்கிய விதம் பிடித்து இருக்கிறது. தவெக ஒரு திராவிட கட்சிதான். அவர்கள் திராவிட சித்தாந்தம் கொண்ட கட்சிதான். தவெகவின் கொள்கை தலைவர்களாக பெரியார், அண்ணா இருக்கிறார்கள். அதனால் தவெக திராவிட கட்சிதான்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அரசியல் செய்யும் கட்சிதான் விஜயின் கட்சி. எனக்கு இது மகிழ்ச்சியை கொடுக்கிறது. விஜயின் நடவடிக்கை நம்பிக்கை அளிக்கிறது. சட்டமன்ற தேர்தலில் விஜய் பாஜகவை எதிர்க்க வேண்டியது திமுகதான். திமுகவை அதனால்தான் பந்து போல விஜய் உதைக்கிறார். விஜய் அதனால் திமுகவை எதிர்க்கிறார். இதில் தவறு எதுவும் இல்லை., என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
-
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா? -
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா? -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ்












Click it and Unblock the Notifications