நாஞ்சில் சம்பத்தை சுத்து போட்ட "இன்னோவா" திமுகவினர்.. 15வது நொடியில் நடந்தது: இடும்பாவனம் கார்த்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாஞ்சில் சம்பத் முதிர்ச்சியும் அனுபவமும் கொண்டவர். பொது மேடையில் அத்தகைய ஆபாசமான சொற்களை உச்சரித்தது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது" என்று நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பேச்சாளரும் மற்றும் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளருமான இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்றைய தினம் தான் பங்கேற்ற அந்த மேடையில் என்ன நடந்தது என்பதையும் விலாவரியாக விவரித்துள்ளார்.

யூடியூப் வீடியோ ஒன்றில் பேசியிருக்கும் இடும்பாவனம் கார்த்திக், "நேற்றைய நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்தை அறிமுகம் செய்யும்போது, உண்மையான சொல்லின் செல்வர் மற்றும் நாவுக்கரசர் என்று அறிமுகப்படுத்தினார் ரங்கராஜ் பாண்டே.. உடனே நாஞ்சில் சம்பத் பேச ஆரம்பித்தார்.. அப்போது திமுகவினர் சில விமர்சனங்களை முன்வைத்தனர். இன்னோவா சம்பத் என்று ஏதோ சொல்லி விமர்சித்தார்கள்..

Nanjil Sampath Idumbavanam Karthik Innova Sampath TVK

இப்படியிருந்தால் எப்படி பேசுவது என்று கேட்ட நாஞ்சில் சம்பத், மிக மோசமான, அவையில் பதிவு செய்யக்கூடாத ஒரு கீழ்த்தரமான கெட்ட வார்த்தையை பயன்படுத்தி அவர்களை ஏசினார்.. பெண்கள் உள்ளிட்டோர் இருக்கும் அவையில், பொது மேடையில் அந்த கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார்.

நாஞ்சில் சம்பத் 15வது நொடி

முதலில் அவர் என்ன சொன்னார் என்பது எங்களுக்கு கேட்கவில்லை; கோவை சத்யன், நான், ராஜீவ் காந்தி உட்பட யாருக்குமே அவர் சொன்னது சரியாக கேட்கல.. பிறகுதான் அது உறுதிப்படுத்தப்பட்டவுடன், ரங்கராஜ் பாண்டேவிடம், ராஜீவ் காந்தி, நான் உட்பட எல்லாரும் சேர்ந்து, நாஞ்சில் சம்பத் தவறாக பேசியதைக் கண்டித்து, மன்னிப்பு கோருமாறு வற்புறுத்தினோம்.

அதற்குள் அங்கு கூடியிருந்த கூட்டம் ஆவேசமடைந்து, மேடையை நோக்கி முன்னேறி வந்தார்கள். ஒரு நாற்காலியை தூக்கி வீசினார்கள்.. கலவரமாக மாறும் சூழலை உருவாக்கியது. நாஞ்சில் சம்பத் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டிய ஒரு அபாயகரமான நிலை அங்கு நிலவியது. அப்போது ராஜீவ் காந்தி மற்றும் நானும் குறுக்கிட்டுத் தடுத்தோம்.

15 நொடியில் களேபரம்

மொத்தமே 15 நொடிதான் நாஞ்சில் சம்பம் பேசியிருப்பார்.. தொடர்ந்து பேசினால் தேவையில்லாத சலசலப்புகள் உருவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, விவாதத்தின் எஞ்சிய நேரம் முழுவதும் அவர் அந்த மேடையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தனி அறையில் உட்கார வைக்கப்பட்டார். கடைசிவரை அவரை பேசவைக்கவும் இல்லை..

நாஞ்சில் சம்பத் தமிழ்நாட்டில் பல சிறைகளை கண்டவர், எண்ணற்ற மேடைகளில் பேசிய அனுபவம் கொண்டவர், பல கலவரமான பொதுக்கூட்டங்களைச் சமாளித்தவர். இவ்வளவு முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட ஒரு நபர், பொது மேடையில் அத்தகைய ஆபாசமான சொற்களை உச்சரித்தது மிகுந்த ஆச்சரியத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

உச்சரித்த கெட்ட வார்த்தை

65 வயதுக்கு மேல் ஆகிறது.. அவர் போன்ற மூத்த பேச்சாளருக்கு சகிப்புத்தன்மை அவசியம். இலக்கியம் மற்றும் வரலாற்று தகவல்களை தர்க்கரீதியாக முன்வைக்கும் ஆற்றல் கொண்டவர். இன்னோவா சம்பத் என்றால் அதை கடந்து சென்றிருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அப்படி குறுக்கீடு செய்பவர்களை கண்டிக்கலாம். என்னைத் தர்க்கரீதியாக விவாதிக்க விடுங்கள், கூச்சல் போட்டு குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்" என்று சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு

ஆனால், அந்த மேடையில் உணர்ச்சிவசப்பட்டு, தன்னை மீறி அவர் உச்சரித்த அந்த வார்த்தை, அந்த விவாதத்தின் மாண்பையே சிதைத்துவிட்டது. கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தியது அவரது தராதரத்தை மட்டுமே காட்டுகிறது. நாஞ்சில் சம்பத் பொதுவாகவே ஆபாசமாக, கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்.. பேட்டிகளில்கூட பலரையும் ஒருமையில் பேசுபவர்..

சுத்து போட்ட திமுகவினர்

தவெகவை பொறுத்தவரை, அடுத்தவர்களை பேச விடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளது.. அவர்களுக்குக் கொள்கை, கோட்பாடு அல்லது சித்தாந்தம் என்று எதுவும் கிடையாது என்றும், கொள்கை என்றால் என்னவென்று கேட்டால் "அது எவ்வளவு?" என்று கேட்கும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்..

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் அல்லது ஆணவக் கொலைகள் போன்ற முக்கியமான சமூகப் பிரச்சனைகள் குறித்து எந்தவொரு நிலைப்பாடும் எடுக்காமல், தவெக தரப்பினர் அமைதியாகவே இருக்கிறார்கள்.. தவெக-வினர் கருத்துகளை உள்வாங்குவதற்கோ, ஜனநாயக முறைப்படி மாற்றுக்கருத்துகளை விவாதிப்பதற்கோ ஒருபோதும் தயாராக இல்லை..

இனோவா சம்பத் என்றதற்கே, அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.. உடனே அந்த கெட்ட வார்த்தை சொல்லிவிட்டார்.. அதைக்கேட்டதுமே, திமுகவினர் அவரை சுத்து போட்டு, அடிக்க பாய்ந்தபோது, அவர் காப்பாற்றப்பட்டுவிட்டார். இருந்தாலும், இப்படி பேசியது கண்டிக்கத்தக்கது.. இதுபோன்றவர்களை வாக்கு செலுத்தி தேர்ந்தெடுத்தீங்க.. இன்னும் 5 வருஷத்துக்கு தமிழ்நாடு என்ன பாடுபட போகுதோ??" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+