விஜய் கட்சியில் இணைந்த நாஞ்சில் சம்பத்.. அடித்து ஆடும் தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் முன்னிலையில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே விஜய்க்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பேசி வந்த நிலையில், இன்று நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்திருக்கிறார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளில் இணைய தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு ஒரு மிகப்பெரிய பட்டாளமே சென்றிருக்கிறது.

Nanjil Sampath Joins TVK

அதேபோல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தவெகவில் இணைந்தார். தற்போது செங்கோட்டையனை தொடர்ந்து திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். தவெக அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் நாஞ்சில் சம்பத் அக்கட்சியி இணைந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே விஜய்க்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பேசி வந்தார். இதனிடையே திமுக நடத்திய அறிவுத் திருவிழாவில் நாஞ்சில் சம்பத்திற்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சோகத்தில் இருந்தார். இதனை வெளிப்படையாகவும் கூறினார். அதேபோல் அதிமுகவின் இடத்தை தவெக நிரப்பும் என்றெல்லாம் பேசி இருந்தார்.

இருந்தாலும் சில நாட்களுக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேச நாஞ்சில் சம்பத் அழைக்கப்பட்டிருந்தார். இதனால் நாஞ்சில் சம்பத் உற்சாகத்தில் இருந்தார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்திருக்கிறார். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருப்பதால், நாஞ்சில் சம்பத் இணைந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

அதேபோல் நாஞ்சில் சம்பத் ஏற்கனவே மதிமுகவில் இருந்து அதிமுக சென்று, அதிமுகவில் இருந்து அமமுக சென்று, பின்னர் திமுக வந்தார். தற்போது திமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றுள்ளார். இதனால் நாஞ்சில் சம்பத் மீது சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. இருந்தாலும் திராவிட இயக்க பேச்சாளரான நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு லாபமாகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+