அதிமுகவுக்கு 4 சீட்தான் கிடைக்கும்... ஒபிஎஸ் தர்மயுத்தம் 2.0ஐ விரைவில் தொடங்குவார்.. நாஞ்சில் சம்பத்
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவர் நாஞ்சில் சம்பத். அரசியல் மேடைகளில் இவரது பேச்சில் அனல் கக்கும், மிகப் பெரிய கூட்டத்தைக் கூட பல மணி நேரம் வரையிலும்கூட தனது பேச்சைக் கேட்க வைக்கும் திறமை கொண்டவர் நாஞ்சில் சம்பத்.

திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் மதிமுக, அதிமுக, தினகரன் அணி என பல கட்சிகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். நாஞ்சில் சம்பத் ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த நேர்காணலில் தான் பிறந்ததும், வளர்ந்ததும் திமுகவில்தான் என்றும் வைகோவிற்காக கலகம் செய்துவிட்டு திமுகவில் இருந்து வெளியேறினேன் என்றும் தெரிவித்தார்.
அதன் பின், அதிமுகவில் வேறு வழியின்றி அகதியைப் போல சேர்ந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், அக்கட்சியிலிருந்து விலகிய பின்னரும்கூட பெரியார், அண்ணா குறித்துப் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தான் எப்போதும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக விரைவில் உடைய போகிறது என்று குறிப்பிட்ட அவர் துணை முதல்வர் ஓபிஎஸ் விளம்பரங்களில் முதல்வர் இபிஎஸ் இடம் பெறுவதில்லை என்றார். அதேபோல எடப்பாடி பழனிசாமி தரும் அரசு விளம்பரங்களில் துணை முதல்வர் ஓபிஎஸ் இடம்பெறுவதில்லை என்றும் விரைவில் ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0ஐ தொடங்கவுள்ளார் என்றும் தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்துப் பேசிய அவர், "அண்ணாவுக்கு அன்று காங்கிரஸ் மட்டுமே எதிரி, கருணாநிதிக்கு அதிமுக மட்டுமே எதிரி. ஆனால் இன்று சங்க பரிவாரில் தொடங்கி பெருநிறுவனங்கள் வரை அனைவரும் ஸ்டாலின் மீத படைதொடுகிறார். இந்த போரை ஸ்டாலின் மட்டுமே வெல்வார்" என்றார்.
அதேபோல அதிமு வரும் சட்டமன்ற தேர்தலில் வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்றும் மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியே வெல்லும் என்றும் அவர் கூறினார். ரஜினி ரசிகர்களின் ஆதரவு திமுகவுக்குத் தான் இருக்கும் என்று தெரிவித்த அவர், கமல் அரசியலையும் சினிமா போலவே பார்க்கிறார் என்றும் தெரிவித்தார். மேலும், திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணையும் எண்ணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications