மாதம்பட்டி ரங்கராஜ் போல் பேசி நாஞ்சில் விஜயன் வீடியோ! ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன போலீஸால் பரபரப்பு
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிறிஸில்டாவிடம் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசுவது போன்ற வீடியோ வெளியான நிலையில் அதே போல் குரேஷி பேசியிருந்தார். தற்போது அது போன்றதொரு பாலியல் புகாரில் சிக்கிய நாஞ்சில் விஜயனும் ,மாதம்பட்டி ரங்கராஜன் பேசியது போல் பேசி தனது மரியாவுக்கு ஒரு மெசேஜ் சொல்லியுள்ளார்.

இதுகுறித்து நாஞ்சில் விஜயன் அந்த வீடியோவில் பேசுகையில், "ஹோய்! என்னடி பண்ற பொண்டாட்டி, மிஸ் யூ, லவ் யூ, ஷூட்டிங் வந்துட்டேன், மேக்கப் போட்டுட்டேன், perform செய்ய போறேன், யாரு எது சொன்னாலும் நம்பாதே, என்றைக்கும் உனக்கு நான், எனக்கு நீதான், பாப்பாவ பத்திரமா பார்த்துக்கோ, மிஸ் யூ" என கூறிக் கொண்டிருக்கும் போது போலீஸ் கெட்டப்பில் வந்த ஒருவரை பார்த்து நாஞ்சில் விஜயன் பயப்படுவது போல் "சார் சார் நான் எதுவும் பண்ணலை" என்கிறார். உடன் இருப்பவர், யோவ் போலீஸ் கெட்டப்பில் பெர்ஃபார்ம் செய்ய வந்திருக்கிறார் என்கிறார்.
நாஞ்சில் விஜயன் தன்னுடன் 7 ஆண்டுகளாக கணவன்- மனைவி போல் குடும்பம் நடத்திவிட்டு தற்போது தான் யாரென்றே தெரியாது என்கிறார் என திருநங்கை ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 மாதம்
அந்த புகாரில், தன்னுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்திவிட்டு தற்போது 6 மாதமாக தன்னை சந்திப்பதை விஜயன் தவிர்க்கிறார். நாஞ்சில் விஜயனின் குடும்பத்தினர், அவரது மனைவி, மாமியார் உள்ளிட்டோருக்கு எங்களது பாலியல் உறவு தெரியும்.
பெண் வேடமிட்ட நாஞ்சில்
நாஞ்சில் விஜயன் பெண் வேடமிட்டதால் அவரை நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். என்னிடம் நிறைய முறை அழுதிருக்கிறார். இதனால்தான் நானே அவருக்கு மரியாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தேன். ஆனாலும் என் மனம் ஒப்பாததால் திருமணத்திற்கு கூட செல்லவில்லை. திருமணமாகி, அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கூட என்னுடன் வந்து தங்கி உறவு வைத்துக் கொண்டார். ஆனால் தற்போது அதையெல்லாம் மறுக்கிறார். நான் திருநங்கை என்பதால் சமூகத்தில் பெயர் கெட்டுவிடும் என்கிறார். எனவே நாஞ்சில் விஜயன் பழைய படி என்னுடன் பழக வேண்டும் என அந்த புகாரில் திருநங்கை தெரிவித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து, அதன் மூலம் 8 மாத கர்ப்பமாக்கிவிட்டு ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு தற்போது தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார் என ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா புகார் தெரிவித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் காதல் லீலை
இந்த நிலையில் தன்னிடம் மனைவி போல் மாதம்பட்டி ரங்கராஜ் பேசிய வீடியோவை ஜாய் வெளியிட்டிருந்தார். அதில் "ஓய் என்னடி பண்ற? பொண்டாட்டி! ஐ மிஸ்யூ, லவ் யூ! வீட்டிற்கு போய் சாப்பிட்டுட்டு குளித்துவிட்டு டிரஸ் மாற்றிக் கொண்டு வந்துவிட்டேன்.
முத்தம் கொடுத்த மாதம்பட்டி
இன்டர்வியூ முடிந்துவிட்டது. 4 மணிக்கு மீட்டிங் இருக்கு. 2.30 க்கு கிளம்புகிறேன். காபி குடித்து விட்டேன். ஐ மிஸ் யூ, லவ் யூ டாட்டா" என கூறி முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ வைரலானது. இந்த நிலையில் இதே போல் குரேஷியும் கிண்டல் செய்து வீடியோ போட்டிருந்தார். இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்தனர். ஒரு பெண் தன்னை ஒருவர் ஏமாற்றிவிட்டார் என கூறி தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட்டால், இப்படித்தான் கிண்டல் செய்வதா என கேட்டிருந்தனர்.
புகார் அளித்த திருநங்கை
அந்த வகையில் தற்போது நாஞ்சில் விஜயனும் தனது மனைவி மரியாவிடம் பேசுவது போல் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் யார் என்ன சொன்னாலும் நம்பாதே என திருநங்கை புகாரை தெரிவித்துள்ளார். மேலும் அந்த இன்ஸ்டா வீடியோவில் "நம்மை காயப்படுத்த நினைப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் பதில் நம்முடைய சிரிப்பாக தான் இருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications