நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்.. பெண்களுக்கு லட்சம் லட்சமாக.. அள்ளித்தரும் தமிழக அரசு.. அசத்தல்
சென்னை: நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மகளிரின் பெயரில் செயல்படுத்தப்படும். விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5 இலட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.
நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கான திட்டம் ஆகும். பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்காக தமிழ்நாடு அரசு மூலம் உருவாக்கப்பட்ட திட்டமாகும். விவசாய நிலம் வாங்க நிலத்தின் அரசு சார்பாக பணம் வழங்கப்படும்.

மானியம்: இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திட்டச் செலவில் அதிகபட்சம் 50% அல்லது ரூ. 5. இலட்சம் மானியமாக வழங்கப்படும்.
தகுதி என்ன?: இந்த திட்டத்திற்கான தகுதிகள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி விண்ணப்பதாரர் 18-55 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர் எந்த விவசாய நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும்.
இந்த திட்டம் முழுக்க முழுக்க விவசாயம் செய்வதற்கு மட்டுமே வழங்கப்படும். பெண்கள் விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
நிபந்தனைகள்: இந்த திட்டத்தின் கீழ் என்ன மாதிரியான நிபந்தனைகள் இருக்கும்.. என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1. விண்ணப்பதாரர் 18-55 வயதுக்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த விவசாய நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும்
2. அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.
3. விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்க உத்தேசித்துள்ள உறுதி செய்துள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம்.
4, நிலத்தின் விலை சந்தை மதிப்பீட்டின்படி நிர்ணயிக்கப்படும்
5. முத்திரை தான் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.
6. வாங்கிய நிலம் பத்து ஆண்டுகளுக்குள் விற்கப்படக்கூடாது.
7. பயனாளிகள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் கடனாக பெற்று நிலம் வாங்கலாம்.
8. விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடைமையாளர்களாக உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்ட இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. . மகளிரின் பெயரில் செயல்படுத்தப்படும். விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications