Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்.. மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதி ஹேப்பி.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுசுக்கும், தமிழகத்தை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் தான் நடிகர் நெப்போலியன் வீட்டில் கொண்டாட்டம் களைகட்டியது. தனுஷ் - அக்‌ஷயா தம்பதி மாலை மாற்றி கேக் வெட்டிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நெப்போலியன் வீட்டு விசேஷம் பற்றி மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். 1991ஆம் ஆண்டு பாரதிராஜாவின் 'புது நெல்லு புது நாத்து' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது கம்பீரமான நடிப்பால் நடிகர், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். அதன்பிறகு அரசியல் பிரவேசம் சென்றார். திமுக சார்பில் மத்திய அமைச்சராக செயல்பட்டார்.

napoleon cinima wedding

நெப்போலியன் மனைவி பெயர் ஜெயசுதா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் தனுஷ். இளைய மகன் பெயர் குணால். மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோய் (Muscular Dystrophy) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது சிகிச்சையை மனதில் வைத்து நெப்போலியன் அமெரிக்காவில் குடியேறினார்.

சினிமா, அரசியல் உள்ளிட்டவற்றை விட்டுவிட்டு அங்கேயே செட்டில் ஆகியுள்ளார். நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சினிமாவில் ஆரம்ப காலத்தில் ஜெயசுதாவைத் திருமணம் செய்துகொண்டார்.

தசை சிதைவு எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மூத்த மகன் தனுசுக்கு அமெரிக்காவில் அவ்வப்போது சிகிச்சைகள் அளித்து வரப்படுகிறது. இதற்கிடையே தான் கடந்த ஆண்டு அவருக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அவர்களின் திருமணம் வெகுவிமரிசையாக நடந்தது.

ஒரு தந்தையாக நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததை சுட்டிக்காட்டி ஒருதரப்பினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்த நிலையில், இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திருமண வாழ்க்கை வாழ முடியாது என்று சிலர் கூறினர். இந்நிலையில் தான் தனுஷ் - அக்‌ஷயா தம்பதி சமீபத்தில் தலை தீபாவளியை கொண்டாடினர்.

இந்நிலையில் தான் நெப்போலியன் மகன் தனுஷ் - அக்‌ஷயா தம்பதியின் முதலாம் ஆண்டு திருமண நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டம் அமெரிக்காவில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. இதுதொடர்பான வீடியோவை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனுஷ் - அக்‌ஷயா ஆகியோர் மாலை மாற்றி கேக் வெட்டுகின்றனர். அதன்பிறகு இருவரும் மாற்றி மாற்றி ஊட்டி அன்பை வெளிப்படுத்துகின்றனர். இருவரையும் நெப்போலியன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.

மேலும் அந்த வீடியோவில் நெப்போலியன், ‛‛இனிய முதலாம் ஆண்டு திருமணநாள் வாழ்த்துகள். உலகெங்கும் வாழும் அன்பு நண்பர்களே, நமது தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ம் தேதி அன்று ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் தனுஷ் மற்றும் அக்‌ஷயா திருமணம் நம் அனைரவின் அன்போடும், ஆசீர்வாதத்துடனும் இனிதே நடைபெற்றது..! அதற்குள் ஓர் ஆண்டு விரைந்து ஓடிவிட்டது..!

நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நவம்பர் 7 ம் தேதி மாலையில் நாங்கள் வசிக்கும் Nashville நகரில் எங்களது இல்லத்தில் அவர்களது முதலாவது ஆண்டு திருமணநாள் நிகழ்ச்சியை, உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்துடனும், நண்பர்கபளோடு மிகவும், எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடினோம்'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+