சீனாவின் 996 ரூல்ஸ் தெரியுமா? வாரம் 72 மணி நேரம் வொர்க்! விடாத நாராயண மூர்த்தி! நெட்டிசன்ஸ் பதில்
சென்னை: வாரம் 72 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என இன்போசிஸ் நாராயண மூர்த்தி பேசியது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளான நிலையில் மீண்டும் அதே கருத்தை அவர் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியே 100 மணி நேரம் உழைக்கிறார் என்றும், சீனாவின் 996 ரூல்ஸ் பற்றி தெரியுமா எனவும் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்களும் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.
இன்போஸிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற வாதத்தை நீண்ட காலமாக முன்வைத்து வருகிறார். நாடு முன்னேற வேண்டும் என்றால் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும், நான் எனது பணி அனுபவத்தில் நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தேன் என்றும் கூறினார்.

பின்வாங்க மாட்டேன்
நாராயணமூர்த்தியின் இந்த கருத்து இணையதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. எனினும், தனது கருத்தில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன் என கூறிய நாராயண மூர்த்தி அவ்வப்போது பணி நேரம் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், பணி நேரம் தொடர்பான விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறார் நாராயண மூர்த்தி.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாராயண மூர்த்தி இது தொடர்பாக கூறியதாவது:- "கடின உழைப்பு இல்லாமல் எந்த தனிமனிதரும், சமூகமும், நாடும் முன்னேறியதில்லை. மக்கள் முதலில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, பின்னர் வேலை-வாழ்க்கை சமநிலை பற்றி கவலைப்பட வேண்டும். சீனாவின் '996' பணி கலாச்சாரம் உள்ளது.
மோடி 100 மணிநேரம் உழைக்கிறார்
கடந்த ஆண்டு, நிறுவனத்தின் மூத்த மற்றும் இடைநிலை ஊழியர்கள் சீனாவுக்குச் சென்று, முதல், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களைப் பார்வையிட்டனர். உண்மையான சீனாவை அறிய மூன்றாம் நிலை ஹோட்டல்களில் தங்கினர். அங்கே '996' என்ற ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது. அதாவது, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரத்தில் 6 நாட்கள் வேலை. இது வாரத்திற்கு 72 மணிநேரம்.
பிரதமர் நரேந்திர மோடி வாரத்திற்கு கிட்டத்தட்ட 100 மணிநேரம் உழைக்கிறார். இது இளம் பணியாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையலாம்" என்றார். நாராயணமூர்த்தியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சில நெட்டிசன்கள் ஆதரவாக கூறினாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் விமர்சித்தே பதிவிட்டதை காண முடிகிறது.
நெட்டிசன்கள் சரமாரி கருத்து
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ஐரோப்பாவில் '10, 5, 5' என்ற வழக்காடல் உள்ளது. அதாவது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, வாரத்தில் 5 நாட்கள் வேலை. அவர்கள் நடந்து செல்கிறார்கள், மலையேறுகிறார்கள், நண்பர்களைச் சந்திக்கிறார்கள், வாழ்க்கையை 'அனுபவிக்கிறார்கள்'. "அங்கிள், இந்தியாவை சரியான திசையில் வழிநடத்துங்கள். நாங்கள் 'வாழ' விரும்புகிறோம்!!" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "ஐயா, நாங்கள் ஏற்கனவே காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, 12 மணிநேரம் போக்குவரத்து நெரிசலால் செலவிடுகிறோம். ஒரு சொட்டு எண்ணெயில் 100 கி.மீ தூரம் செல்ல வேண்டும் என எதிர்பார்க்க முடியாது; அதேபோல், குறைவான சம்பளம் மற்றும் ஊதிய உயர்வு இல்லாமல் அதிக நேரம் உழைக்க எதிர்பார்க்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
சீனாவின் சம்பளம் தருவீங்களா
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "வாரத்திற்கு 72 மணிநேரம் வேலை: டெட்லைனும் டீயும் இருக்கும்போது யாருக்கு தூக்கம் தேவை?" என கேலியாக பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "சீன ஊழியருக்கு இணையான சம்பளத்தை எனக்குக் கொடுத்தால், நான் வாரத்திற்கு 6 நாட்கள் 16 மணிநேரம் வேலை செய்வேன். எப்படியும் எனக்கு சமூக வாழ்க்கை என்று எதுவும் இல்லை" என்று சம்பள வேறுபாட்டை எடுத்துக்காட்டி கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications