"கை இருக்காது" என்பதா? "கலைராஜனை" கைது செய்ய ஸ்ரைட்டா ஸ்டாலினுக்கே ட்வீட்! விரட்டும் கமலாலயம்.. ஏன்?
விபி கலைராஜனுக்கு பாஜக நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: தொட்டுப்பார்.. உன் கை உன்னிடம் இருக்காது என்று அண்ணாமலைக்கு திமுகவின் கலைராஜன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இதற்கு தமிழக பாஜக கொந்தளிப்பை கொட்டி வருகிறது.. அத்துடன், கலைராஜனை கைது செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கையும் விடுத்துள்ளது.
ஆரம்பத்தில் பாஜகவின் புகார்களையும், விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திவந்த, திமுக அரசு சமீபகாலமாகவே, பதிலடி தரஆரம்பித்துள்ளது.. அந்த வகையில், 2 கட்ட தலைவர்கள் இதற்கு பதில் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு, திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன், பாஜக சீண்டியதுடன், இந்தி மொழியை பற்றி பேசி புதிய சர்ச்சை கிளப்பி இருந்தார்.

இந்தி மொழி
அதாவது, "இந்தி மொழியானது சூத்திரர்களுக்கு மட்டுமே.. இந்தி மொழி என்பது வளர்ச்சியடையாத மாநிலங்களில் தாய்மொழியாக மட்டுமே உள்ளது.. மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் எல்லாம் வளர்ந்த மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தி தாய்மொழியாக இல்லை... வளராத மாநிலங்கள் என்றால் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தான். இங்குதான் இந்தி மொழி என்பது தாய்மொழியாக உள்ளது" என்று பேசியிருந்தார்.

கலைராஜன்
இப்போது அடுத்ததாக, மாஜி எம்எல்ஏ கலைராஜனும் பாஜகவையும், அண்ணாமலையும் சீண்டி பேசியுள்ளார்.. குன்றத்தூரில் நடந்த திமுக கூட்டத்தில் கலைராஜன் பேசியதன் சுருக்கம் இதுதான்: "அண்ணாமலை குறைபிரசவத்தில் பிறந்த குதர்க்கவாதி.. அரைவேக்காடு.. அவர் ஒரு சவால் விட்டுள்ளார்.. மதுரை ஆதீனத்தை தொட்டுப்பாருங்கள், நான் விடமாட்டேன்.. நானே களத்திற்கு வருவேன் என்று சவால் விடுக்கிறார்.. இந்த அண்ணாமலைக்கு அரசியலில் என்ன தெரியும்? இப்போ நான் ஒரு சவால் விடுகிறேன்.. முடிந்தால் தொட்டு பார், உன் கரங்கள் உன்னிடத்தில் இருக்காது..

திமிர்? தைரியம்?
ஓரிருவர் தொண்டர் ஆதரவுள்ள உங்களுக்கே இவ்வளவு திமிர் என்றால், திரும்பிய பக்கமெல்லாம் தொண்டர்கள் இருக்கும் எங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? இந்தி மொழி, மேற்கு வங்கத்தில் இருக்கா? ஒரிசாவில் இருக்கா? மகாராஷ்டிராவில் இருக்கா? ஆந்திராவில் இருக்கா? தெலுங்கானாவில் இருக்கா? கேரளாவில் இருக்கா? கர்நாடகவில் இருக்கா? ஏன் குஜராத்தில் இருக்கா-. கிடையவே கிடையாது.. அப்பறம் ஏன் இந்தியை திணிக்க பார்க்கறீங்க? அண்ணாமலையை அன்பரசு ஏதோ திட்டிவிட்டாராம்.. அதுக்குதான் அந்த சவாலை விட்டுள்ளார்.. நாங்கள் திமுகவினர் எப்படி தெரியுமா? எலிகளை பிடிப்பவர்கள் இல்லை நாங்கள்.. புலிகளை பிடிப்பவர்கள்..

வார்னிங்
எச்சரிக்கிறேன் அண்ணாமலையையும், அவருக்கு துணையாக இருப்பவர்களையும்.. விளம்பரத்துக்காக எதையாவது பேசிவிட்டு, எங்களிடம் வம்பிழுக்காதீர்கள்.. நாட்டில் நடமாட முடியாது.. திரும்பி வீட்டிற்கு செல்ல முடியாது" என்று கலைராஜன் பேசியிருந்தார்.. இதற்குதான் தமிழக பாஜக கொந்தளித்துள்ளது.. அதிலும் நாராயணன் திருப்பதி, 4 ட்வீட்களை அடுத்தடுத்து பதிவிட்டு, திமுகவிடம் கேள்விகளை எழுப்பி உள்ளார். அந்த ட்வீட்கள் இவைகள்தான்:

குன்றத்தூர்
"பாஜக தலைவர் அண்ணாமலையை அழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார் அமைச்சர் தா மோ அன்பரசன். குன்றத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜனோ, அண்ணாமலையின் கரங்கள் இருக்காது என்று ஓலமிடுவதோடு, அவரின் பிறப்பு குறித்து தரக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மொத்தத்தில் திமுக கும்பல் அண்ணாமலையை கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்கிறது. பயத்தில் உளறி கொண்டிருந்தாலும், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசும் திமுகவினரை, அக்கட்சியின் தலைவராக கண்டிக்காவிட்டாலும், தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின், கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவரின் கடமை.

ஆதரிக்கிறார்
அவரின் மௌனம் நீடித்தால் இந்த மிரட்டல்களை அவர் ஆதரிக்கிறார் என்பதோடு அவரின் சம்மதத்தின் பேரிலேயே இந்த மிரட்டல்கள் நடைபெறுகின்றன என்றே பொருள் தரும்.. சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வர் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு துணை போகலாமா? நிர்வாகமின்மையின் காரணமாக மாநிலத்தின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க ஆளும் கட்சியினரே முயற்சிப்பது விந்தையாக உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மீதான கொலை மிரட்டல்களை விடுத்த அமைச்சர் அன்பரசன் மற்றும் கலைராஜன் ஆகியோர் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நாராயணன் பதிவிட்டுள்ளார்.
-
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்! -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி!












Click it and Unblock the Notifications