"எத்தியோபியா ஏன் போனீங்க.." விழித்த நபரின் காலணி, கோட்டில் இருந்து ரூ 100 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரு பயணியிடம் ரூ.100 கோடி மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கஞ்சா பயன்பாட்டை முற்றிலும் ஒடுக்கும் வகையில், கடந்த 11-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், முதலமைச்சர் அறிவுரை வழங்கியிருந்தார். முதலமைச்சரின் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் கஞ்சாவை தடுக்கு தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விமான நிலையத்தில் சோதனை
இந்நிலையில், எத்தியோப்பியா நாட்டிலிருந்து பெரும் அளவு போதை பொருள் சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், ஆப்பிரிக்கா நாடான எத்தியொப்பியா நாட்டின் அடீஸ் அபாபா நகரிலிருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்.

இந்தியர் மீது சந்தேகம்
இதில் இந்தியரான இக்பால் பாஷா என்ற பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தடுத்தி நிறுத்தி விசாரித்தனர். எதற்காக ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியன் சென்று வருகிறார்? என்று கேட்டனா். அதற்கு அந்த பயணியால், சரியான பதில் அளிக்க முடியவில்லை. இதை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனர்.

ரூ.100 கோடி மதிப்பிலான கஞ்சா
அப்போது அவர் அணிந்திருந்த காலணிகள் மற்றும் உள்ளாடைகள், அவர் அணிந்திருந்த கோர்ட்டுக்குள் ரகசியப்பை அறைகள் என்று பல்வேறு இடங்களில் மொத்தம் 9 கிலோ 590 கிராம் எடையுடைய கொக்கைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய் 100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அதிர்ச்சி
இந்த நிகழ்வு சுங்க அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கியது. சென்னை விமான நிலையம் 1932 ஆம் ஆண்டு உருவாகிய பின்பு, இதுவரை இந்த அளவு ஒரே பயனிடம் ஒரே நேரத்தில் ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல் செய்ததே கிடையாது. இதுவே முதல் முறை. இதை அடுத்து அந்தப் பயணியை கைது செய்த சுங்கத்துறையினா், ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருளையும் பறிமுதல் செய்து, அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
இவர் இந்த ரூ.100 கோடி மதிப்புடைய போதை பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்து, எங்கெங்கெல்லாம் கடத்த இருந்தாா். இவர் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடத்துகிறது. சென்னை விமான நிலையத்தில் இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications