அக்டோபர் 11 ஒரே மேடையில் மோடி விஜய்.. டேக் ஆப் ஆகும் பூந்தமல்லி வடபழனி மெட்ரோ ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசியல் எதிரி. பாஜக கொள்கை எதிரி என்று கூறி தவெக ஆட்சியை பிடித்தது. திமுகவை எதிர்க்குமளவுக்கு, பாஜகவை தவெக எதிர்ப்பதில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைப்பதற்காக வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரவுள்ளார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜயும் கலந்துகொள்ளவுள்ளார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு இருவரும் இணைந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், இது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் இருந்தும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடக்கின்றன. 118 கி.மீ தொலைவுக்கு இந்தப் பணிகள் நடக்கின்றன. பூந்தமல்லி - வடபழனி இடையேயான 14.6 தொலைவிலான பணிகள் நிறைவடைந்தது.

Modi Metro

மோடியும், விஜயும் ஒரே மேடையில்

கடந்த 2025 டிசம்பர் மாதம் தொடங்குவதாக இருந்தது. பிறகு மார்ச் மாதம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கு கடந்த மே மாதம் இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான தொடக்க தேதியை மத்திய அரசுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

சட்டமன்ற தேர்தல் காரணமாக மெட்ரோ ரயில் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது. பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொங்கி வைப்பதற்காக வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யும் கலந்து கொள்ளவுள்ளார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக மோடியும், விஜயும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பாஜக திட்டம்

முதல்கட்டமாக 11 ரயில் நிலையங்களில் மெட்ரோ சேவை தொடங்கப்படும் என்றும் பிறகு கூடுதலாக 6 நிலையங்களில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சி, நெடுஞ்சாலைத்துறை திட்ட தொடக்க நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்கிறார். மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பை அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+