Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி vs யோகி இமேஜ் யுத்தம்.. மோடி தன்னை கடவுளின் பிறவி என்று கூற "இதுதான்" காரணமா? போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பு இல்லை, நான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மோடியின் இந்த கருத்துக்கு பின் மோடி vs யோகி இடையே நிகழ்வும் இமேஜ் யுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜகவில் இத்தனை காலம் பிரதமர் மோடி மிகப்பெரிய தலைவர், சூப்பர் ஹீரோ, ஏன் ரட்சகன் என்றெல்லாம் கூட வர்ணிக்கப்பட்டு வந்தார். இந்தியா கண்டத்திலேயே வலுவான தலைவர் என்றும் கூட வர்ணிக்கப்பட்டு வந்தார்.

Narendra Modi vs Yogi Adityanath image war Why does PM call himself as a god sent

ஆனால் இப்போது அதெல்லாம் போய் மோடியை கடவுளுக்கு இணையாக ஒப்பிடும் அரசியலை பாஜக எடுத்துள்ளது. சமீபத்தில் பாஜக மூத்த நிர்வாகி சம்பித் பத்ரா ஒடிசாவின் பூரியில் பிரதமரின் ரோட்ஷோவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, ​​​​கடவுள் ஜகந்நாத் பகவான் பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர் என்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கடவுளே மோடியின் பக்தர்தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மோடி கடவுள் இமேஜ்: ஒடிசாவில் பழங்காலமாக வணங்கப்படும் தெய்வமான ஜெகநாதரைப் பற்றிய அவரின் இந்த கருத்து கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) இதற்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது.

தற்போது இதற்கு சம்பித் பத்ரா மன்னிப்பு கேட்டு, வாய் தவறி சொல்லிவிட்டதாக கூறி உள்ளார். அதில், நான் கூறிய ஒரு கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பூரியில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட்ஷோவுக்குப் பிறகு, நான் பல ஊடக சேனல்களுக்கு பைட் கொடுத்தேன், எல்லா இடங்களிலும் நான் அதையே சொன்னேன், பிரதமர் நரேந்திர மோடி மகாபிரபு ஜெகநாதரின் தீவிர பக்தர்... இறுதியில், மற்றொரு சேனல் எனது பைட்டை எடுத்தபோது, ​​​​அது தெரியாமல் மிகவும் சூடாகவும், கூட்டமாகவும், சத்தமாகவும் இருந்தது.

கடவுள் ஒரு மனிதனின் பக்தன் என்று ஒரு நபர் ஒருபோதும் சொல்ல முடியாது, நான் இந்த தவறை வேண்டுமென்றே செய்யவில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் வேண்டுமென்றே செய்யாத தவறுகளை கடவுள் மன்னிக்க வேண்டும். இந்த தவறுக்காக ஜெகநாத் கடவுளுக்கு வருத்தம் இருக்கிறேன். 1 வாரம் விரதம் இருந்து மன்னிப்பு கேட்க போகிறேன், என்று கூறியுள்ளார்.

ஒடிசா பேட்டி: இப்படிபட்ட நிலையில்தான் ஒடிசாவில் பிரச்சாரத்திற்கு இடையே ஊடகம் ஒன்றிற்கு பேசிய பிரதமர் மோடி, நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பு இல்லை, நான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை என்று பிரதமர் மோடி கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர் தனது பேச்சில், என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்; பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன்.

ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

யோகி - மோடி இமேஜ் யுத்தம்: மோடியின் இந்த கருத்துக்கு பின் மோடி vs யோகி இடையே நிகழ்வும் இமேஜ் யுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் களத்தில் இருக்கும் நிர்வாகிகள், அரசியல் நிபுணர்களுக்கு தெரியும்.. நாடு முழுக்க மோடியின் இமேஜ்தான் பெரிது என்றாலும்.. உத்தர பிரதேசத்தில் மோடியை விட யோகி இமேஜ்தான் பெரிது.

அங்கே மோடியை விட யோகிக்கே பெரிய பலம். இப்போதும் கூட யோகியை பிரதமராக கொண்டு வர ஆர்எஸ்எஸ் காய் நகர்த்தலாம் என்றும் சில அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள். பாஜக தலைவர்களை மோடி ஒதுக்கி வருவதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. அதனால்தான் இந்த முறை ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளை செய்யவில்லை. மோடியை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன.

ஆர்எஸ்எஸ் மோடி மோதல்: ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே உரசல் நிலவுவதாக வரக்கூடிய செய்திகளுக்கு இடையே பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ளதாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவரே இப்படி நேரடியாக ஆர்எஸ்எஸ் பற்றி குறிப்பிட்டு இருப்பது தேசிய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக 2024 லோக்சபா தேர்தலுக்கு நடுவில் இந்த வந்திருப்பதுதான் அதிக விவாதத்தை ஏற்படுத்துகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் யோகியை ஆர்எஸ்எஸ் முன்னிறுத்த வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு யோகி கூடுதல் நெருக்கம். ஆர்எஸ்எஸ் குரலை கேட்க கூடியவர். மோடி போல தன்னிச்சையாக இருக்க மாட்டார் என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறதாம்.

இப்படிப்பட்ட நிலையில்தான் யோகியை விட பெரிய இமேஜாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்று மோடி இப்போது தன்னை கடவுளின் பிறவி, கடவுளின் தூதுவர் என்றெல்லாம் பேச தொடங்கி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+