நத்தம் நிலம்.. பட்டா, சிட்டா ஆவணத்தின் முக்கியத்துவம்.. ஆன்லைனில் வசதிகளை அள்ளி தந்த தமிழக அரசு! செம
சென்னை: பத்திரப்பதிவுத் துறையால் பதிவு செய்யப்படும், பத்திரங்கள் மற்றும் ஆவணங்களில் குறிப்பிடப்படும் சொற்களை அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்தவகையில் தவிர்க்க முடியாதது சிட்டா ஆவணங்கள்.. நிலப்பட்டா ஆணவத்தைபோல சிட்டா ஆவணமும் முக்கியமானதாக கருதப்பட என்ன காரணம் தெரியுமா? சிட்டா ஆவணத்தின் அவசியம் என்னென்ன? எங்கெங்கு சிட்டா ஆவணம் உபயோகப்படும்? சிட்டா ஆவணத்தை எப்படி பெறுவது?
பட்டா அளவுக்கு சிட்டாவின் அவசியத்தை பலரும் உணர்வதில்லை.. அதனால்தான், சில இடங்களில் அவர்கள் ஏமாற நேரிடுகிறது. வருங்காலத்தில் இப்படிப்பட்ட அலட்சியங்களை தவிர்க்க வேண்டுமானால் சிட்டாவின் அவசியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வருவாய்த்துறை சான்றிதழ்தான் பட்டா என்பார்கள்.. இந்த பட்டாவின் ஒரு பகுதியைதான் சிட்டா என்பார்கள்.. பட்டாவில் ஏற்கனவே சில அடிப்படை தகவல்கள் இருந்தாலும், கூடுதல் தகவல்களும் சேர்த்து சிட்டாவில் இடம்பெற்றிருக்கும்.
சிட்டா பயன்கள், தேவைகள்
முக்கியமாக, ஒருவரின் சொத்து எங்குள்ளது? அதன் அளவுகள் என்னென்ன? சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் யார்? நஞ்சை நிலமா, புஞ்சை நிலமா? நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா வகை என்ன? அவை பயன்பாட்டில் உள்ளதா? போன்ற விவரங்களை உள்ளடக்கியதுதான் பட்டா.
அதாவது, குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விபரங்கள் கொண்ட வருவாய்த்துறை ஆவணமாகும்.
ஒருவர் வங்கிகள் மூலம் சொத்தின் பேரில் கடன் வாங்குவதாக இருந்தால், பட்டாவுடன் சேர்த்து சிட்டா ஆவணமும் அவசியம் தேவைப்படும்.. காரணம், அந்த சொத்தின் உரிமை, சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள இடம் இவைகளை வைத்துதான் வங்கிகளில் கடன் பெறும் தகுதி நிர்ணயம் செய்யப்படுகிறது.
சிட்டா ஆவணத்தின் முக்கியத்துவங்கள்
அதுமட்டுமல்ல, இயற்கை அழிவுகளால் நிலம் பாதிப்புக்குள்ளாகிவிட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு அரசு இழப்பீடு தரும்.. அதேபோல அந்த நிலத்தினை பயன்பாட்டுக்காக அரசு எடுத்துக்கொண்டாலும், அதற்குரிய இழப்பீட்டு தொகையை அரசு உரியவருக்கு தந்து விடும்.. ஆனால், இந்த இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு சிட்டா ஆவணம் அவசியமாகும்.
அதேபோல, ஏதோ ஒரு காரணத்துக்காக, விவசாய நிலத்தை விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால், அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தை விற்க வேண்டிய சூழல் உருவானால், அதற்கும் பட்டாவை போல சிட்டா ஆவணம் தேவைப்படுகிறது.
பட்டா, சிட்டா ஒரே ஆவணம்
நில உரிமைக்கான சட்டப்பூர்வ சான்றிதழாக சிட்டா திகழ்வதால், நிலம் தொடர்பான விவகாரங்களை, சிக்கல்களை அதிகாரபூர்வமாக தீர்க்க சிட்டா ஆவணங்கள் உதவுகின்றன..
இந்த அளவுக்கு முக்கியத்துவம் இருப்பதால்தான், பட்டா, சிட்டா என்ற இரு ஆவணங்களும் இணைக்கப்பட்டு, ஓரே ஆவணத்தில் கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது.. மேலும், சிட்டா பட்டா, அடங்கல் சான்றிதழ்களை இப்போது ஆன்லைனிலேயே பார்க்க முடியும். எங்கிருந்தும், எந்த நேரத்திலும் பட்டா, சிட்டா ஆவணங்களை பதிவிறக்கும் செய்யும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்..
ஆன்லைன் வெப்சைட் வசதிகள் என்னென்ன
பட்டா, சிட்டாவை எளிதாக பெற வெப்சைட் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.. அந்தவகையில் கீழ்க்கண்ட இணையவழிச் சேவைகள் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
1. கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.
2. நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து காட்டக் கோருவதானால், https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.
3. எங்கிருந்தும் எந்நேரத்திலும் இந்த இணையவழிச் சேவையை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, "அ" பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளாம்.
4. கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்றவற்றை https://tnlandsurvey.tn.gov.in என்ற வெப்சைட் மூலமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதில் முதலிலுள்ள 2 சேவைகளை அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications