என்னாச்சு நத்தம் விஸ்வநாதனுக்கு? திண்டுக்கல் அதிமுகவில் பரபரப்பு! இது தான் காரணமா? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சரும் அதிமுக நிர்வாகிகளில் ஒருவருமான நத்தம் விஸ்வநாதன் கடந்த சில தினங்களாகவே பொதுவெளிகளில் அதிகம் தென்படாதது கட்சியினரை குழப்பத்தை ஆழ்த்தியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சிவி சண்முகம், வேலுமணி அணியில் இருந்த இவர் சமீப காலமாக அதிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. தமிழகத்தை அதிக முறை ஆண்டும் கட்சி, அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சி அமைத்த கட்சி உள்ளிட்ட பெருமைகளை கொண்ட அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

Natham Viswanathan

இதற்கிடையே திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக வெளியான தகவலால் அந்த கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே அதிமுகவில் சிவி சண்முகம் - வேலுமணி தலைமையில் திடீரென ஒரு அணி கிளம்பியது.

எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியதோடு சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களின் பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கிடையே அந்த அணியில் இருந்த பலர் அதிருப்தி எம்எல்ஏக்களாக தொடர்கின்றனர். விஜயபாஸ்கர் அண்ட் கோ, சத்தியபாமா உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

ஆனால் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல அதிமுகவிலும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் செல்ல முடியாமல் சிலர் தவிர்த்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் நத்தம் விஸ்வநாதன். நத்தம் தொகுதியை பூர்வீகமாகக் கொண்ட அவர் முன்னாள் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.

மேலும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஐந்து தளபதிகளில் ஒருவர் நத்தம் விஸ்வநாதன். 2021 சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2026 இல் மீண்டும் நத்தம் தொகுதிக்கு திரும்பியவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த சட்ட சபை பட்ஜெட் கூட்ட தொடருக்கு பிறகு பொதுவெளிகளில் அதிகமாக நத்தம் விஸ்வநாதன் தென்படுவதில்லை.

திண்டுக்கல்லில் உள்ள அதிமுக தலைமையகத்தையும் திண்டுக்கல் சீனிவாசன் முழுமையாக கைப்பற்றி விட்ட நிலையில் கட்சி அலுவலகம் பக்கமும் வருவதில்லை. தொகுதி பக்கமும் தலைகாட்டவில்லை என்கின்றனர். எடப்பாடி மீதான அதிருப்தி காரணமாகவே அதிமுக நிகழ்வுகளில் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொள்ளவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதே நேரத்தில் லேசான உடல்நல கோளாறு காரணமாக ஓய்வெடுத்து வருவதாகவும் நத்தம் தொகுதிக்குள் பேசிக் கொள்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+