விஸ்வாசம் காட்டாத விஸ்வநாதன் கழற்றி விட்ட கடம்பூரார்! என்னங்க இப்படி ஆயிருச்சு? ஆனால் ஒரே நம்பிக்கை?
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஐவர் அணியில் வலது கரம் போல் செயல்பட்டவரும், தர்ம யுத்தத்தின் போது நேரடியாக ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்த நத்தம் விஸ்வநாதன் தற்போது எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவி இருப்பது, அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு நிர்வாகி எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த பல நிர்வாகிகள் தற்போது எடப்பாடி அணியில் ஆலோசனை நடத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

அதிமுக பொதுக்குழு
இன்னும் மூன்று நாட்களே நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக வின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஓ.பன்னீர்செல்வம் நிராகரித்துள்ள நிலையில் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருபுறம் தங்கமணி வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வரும் நிலையில் பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் படலமும் தொடர்ந்து வருகிறது.

மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு
முதல் இரு இருநாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கோ பன்னீர்செல்வத்துக்கோ நேரடியாக ஆதரவு தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அடுத்தடுத்த நாட்களில் எடப்பாடி அணிக்கு அளித்து வருகின்றனர். தற்போது நிலவரப்படி சுமார் 60-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி தரப்பில் தஞ்சம் அடைந்திருக்கும் நிலையில், தாமும் துண்டு போட்டு வைப்போம் என்ற ரீதியில் தாங்களாகவே சென்று எடப்பாடி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடுநிலையாக கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் எடப்பாடி பக்கம் சாய்ந்தார்.

ஓபிஎஸ் அதிர்ச்சி
மேலும் கடந்த காலங்களில் ஓபிஎஸ் உடன் நெருக்கம் காட்டி வந்த கடம்பூர் ராஜு உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்களும் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கட்சியில் பல ஆண்டுகளாக ஓபிஎஸ் ஆதரவாக கருதப்பட்ட நிர்வாகிகள் பலரும் தற்போது எடப்பாடி அணிக்கு திரும்பியுள்ளனர். இது அவரது தரப்புக்கு பலத்த பின்னடைவாக இருப்பதாகவே கருதப்படுகிறது.

நத்தம் விஸ்வநாதன்
ஓபிஎஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மயுத்தம் நடத்தியபோதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அமைக்கப்பட்டிருந்த அவர் அணியில் ஓபிஎஸ் வழக்கம்போல செயல்படும் வருமான நத்தம் விஸ்வநாதன் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எடப்பாடி ஆதரவாளரான திண்டுக்கல் சீனிவாசன் ஏற்பட்ட மோதல் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வளவாக நெருக்கம் காட்ட நத்தம் விஸ்வநாதன் ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராகவே அறியப்பட்டவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசி வந்த அவர் தற்போது எடப்பாடி அணியில் நிரந்தரமாக தங்கிவிட்டார். இதன் காரணமாக ஓபிஎஸ் தரப்பு பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

சமாதான படலம்
தற்போதைய சூழ்நிலையில் தொண்டர்கள்தான் ஓபிஎஸ்-ன் ஒரே நம்பிக்கை என கூறி வந்தாலும் என பிரம்மாஸ்த்திரங்களை ஓபிஎஸ் தன் வசம் வைத்து இருக்கிறார். ஒன்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்திட்டால் தான் அது செல்லும். என்ன நடந்தாலும் அதில் கையெழுத்திட போவதில்லை என உறுதியாக இருக்கிறார் ஓபிஎஸ். இரண்டாவது கட்சியில் இருந்து விலக்கப்பட்ட சில "முக்கிய" "மூத்த" நிர்வாகிகள் பலரை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி எடப்பாடியை வீழ்த்த திட்டம் போட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. எப்படி எனினும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வரை தொடர்ந்து இந்த சந்திப்பு சமாதானப் படலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications