தங்கத்தை விடுங்க.. பாதாளத்தில் படுத்தேவிட்டது வைரம் விலை! 20 ஆண்டுகளில் இல்லாத சரிவு.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வைரங்களின் விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. 2021ஆம் ஆண்டின் வைரம் விலை உச்சத்திற்கு போன நிலையில், அத்தோடு ஒப்பிடும்போது மொத்த விற்பனை சந்தையில் வைரங்களின் விலை தற்போது 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. செயற்கை வைரங்கள் தான் இந்த இயற்கை வைரங்கள் சந்தையை மொத்தமாக காலி செய்துவிட்டது.

ஒரு காலத்தில் வைரம் என்றாலே ஒரு பிரமிப்பு இருக்கும். ஆனால், அந்த பிரமிப்பு எல்லாம் இப்போது போய்விட்டது. வெள்ளி விலை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பெரியளவில் சரிந்துள்ளது. தற்போது ஒரு கேரட் எடையுள்ள வட்ட வடிவ இயற்கை வைரத்தின் விலை 3,530 முதல் 3,860 டாலர் வரை உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு வைரம் விலை உச்சத்தில் இருந்த நிலையில், அத்தோடு ஒப்பிடும்போது இது சுமார் 40% சரிவாகும்.

Diamond Prices Crash

இயற்கை வைரங்கள்

இயற்கை வைர சந்தைக்கு இப்போது முக்கிய சவாலாக இருப்பதே ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் லேப் க்ரோன் வைரங்கள் எனப்படும் செயற்கை வைரங்கள் தான். ஆரம்பத்தில் செயற்கை வைரங்கள் மார்கெட்டிற்கு வந்தபோது, இரண்டிற்குமான வேறுபாடு தெளிவாக தெரிந்தது. ஆனால், ஆண்டுகள் செல்ல செல்ல செயற்கை வைரங்கள் பார்க்க இயற்கை வைரங்களை போல ஆகிவிட்டது. ஆனால், அதன் விலை 70 முதல் 85 சதவீதம் குறைவாக இருக்கும்.

சீனாவின் செயற்கை வைரம்

உலகளாவிய செயற்கை வைர உற்பத்தியில் 60%க்கு மேல் சீனாவில் இருந்தே வருகிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில், சீனாவின் லேப் க்ரோன் வைர ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 65.3 சதவீதம் அதிகரித்துள்ளது. குறைந்த விலையில் வைரங்கள் அதிக அளவில் சந்தைக்கு வருவது, இயற்கை வைரங்களின் விலை கடுமையாக பாதிக்கிறது. இந்தளவுக்கு அதிக வைரம் சந்தைக்கு வருவதால் செயற்கை வைரங்களின் விலையே கூட 2022ஆம் ஆண்டு உடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைந்துள்ளது.

இயற்கை வைரங்களின் தேவை குறைந்ததால் வைர சுரங்க தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்களுக்கு இதனால் மிக பெரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. வைர சுரங்க தொழிலை நம்பியே இருக்கும் போட்ஸ்வானா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒப்பிட முடியாது

இதற்கிடையே சிலர் வைரங்களையும் பிட்காயினையும் ஒப்பிட்டு வருகிறார்கள். ஆனால், வைரங்களையும் பிட்காயினையும் நேரடியாக ஒப்பிட முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள்! ஒரு கேரட் வைரத்தின் மதிப்பு அது எப்படி கட் செய்யப்பட்டுள்ளது, அதன் நிறம், தெளிவு ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். ஆனால், பிட்காயின் எல்லாமே ஒன்று தான். எவ்வளவு இயற்கை வைரத்தை நம்மால் பூமியில் இருந்து எடுக்க முடியும் என்பது நமக்கு தெரியாது. ஆனால், பிட்காயின் 2.1 கோடி மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டையும் ஒப்பிட முடியாது.

முதலீடு இல்லை!

ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படும் வைரம் கிட்டத்தட்ட ஒர்ஜினல் வைரத்தை போலவே இருக்கிறது. அந்தளவுக்கு அதன் தரம் மேம்பட்டுவிட்டது. பெரும்பாலான மக்களால் எது ஒர்ஜினல் வைரம் எது செயற்கை வைரம் என்பதை வேறுபடுத்தி காட்ட முடியாது. அந்தளவுக்கு பக்காவாக உருவாகும் வைரங்களை அதிக அளவில் தயாரிக்க முடிவதால், இயற்கை வைரங்கள் மீதான பிரமிப்பும் அது ரொம்பவே அரிதானது என்ற நினைப்பும் இல்லாமல் போகிறது. இதனால் விலை சரிகிறது.

பெரிய அளவு, உயர்தர நிறம் மற்றும் தெளிவு கொண்ட இயற்கை வைரங்கள் விலை பெரியளவில் சரியவில்லை என்றாலும் அதிகளவில் விற்பனையாகும் சிறிய அளவு வைரங்கள் கடுமையாக சரிந்துவிட்டதசு. சீனாவில் லேப் க்ரோன் வைர உற்பத்தி தொடர்ந்து அதிகரிப்பது, இயற்கை வைரங்கள் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் வைரம் என்பது தங்கத்தை போல ஒரு முதலீடு என்ற நிலையில் இருந்து வெறுமன ஆபரணமாக மாறும் வாய்ப்புகளே அதிகம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+