பிக்பாஸ் வீட்டில் நவராத்திரி: ஒரு பொம்மை கொலு பொம்மைக்கு வர்ணம் தீட்டுதே... அடடே!
பிக்பாஸ் வீட்டிலும் நவராத்திரி பீவர் வந்து விட்டது. ஆட்டம் பாட்டம் கொலு பொம்மைகள் செய்தும் பாரம்பரியமாக இன்று கொண்டாடுகின்றனர். 4 மணிநேரம் இன்றைய பிக்பாஸ் ஒளிபரப்பாக போகிறது.
சென்னை: விஜயதசமியான இன்று பிக் பாஸ் வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற உள்ளது. மாலை 6.30 மணி முதல் 4 மணி நேரம் ஒளிபரப்புகின்றனர். எல்லோரும் பாரம்பரிய உடை அணிந்து, மங்களகரமாக, ஒற்றுமையோடு பிக்பாஸ் வீட்டில் நவராத்திரி பண்டிகையை கொண்டாடுகின்றனர். பார்ப்பதற்கு பொம்மை போல இருக்கும் ரம்யா பாண்டியன் கொலு பொம்மைக்கு வர்ணம் தீட்டுவதைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே எல்லோரும் சந்தோஷமாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் அனிதா, நம்மளதான் பார்க்குதுன்னு சொல்கிறார். உடனே ஒரு குரல் நீங்களே சொல்லுங்கன்னு சொன்னதும், அனிதா மிகவும் புன்னகையோட நவராத்திரி செலிரேஷனை பற்றி பேசுகிறார்.
ஞாயிறு கிழமையன்று ஆயுதபூஜையைப் பற்றி பேசினார் கமல். ஆஜீத் உங்க பாதுகாப்பு ஆயுதத்தை ஆயுதபூஜை நாளில் பயன்படுத்துங்க என்று சொன்னார். இன்றைக்கு பிக்பாஸ் வீட்டில் பாரம்பரியமாக உடையணிந்து போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நவராத்திரிக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நவராத்திரி கொண்டாட்டம்
ரியோ மற்றும் வேல்முருகன் வீட்டை பூ மாலைகள், தோரணங்களால் அலங்கரிக்கின்றனர். அழகுப் புயல் பேபி டால் ரம்யா, கொலுவில் வைப்பதற்கு கொலு பொம்மைகளுக்கெல்லாம் வண்ணம் தீட்டுகிறார்.

மகிழ்ச்சியான நடனம்
அர்ச்சனா மற்றும் சுரேஷ் கிச்சனில் பண்டிகைக்கான இனிப்பு பலகாரங்களை செய்கிறார்கள். நிஷா, ஷிவானி, சம்தயுக்தா, ரியோ, ஆரி, ரம்யா என எல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்று சேர்ந்து நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்விக்கின்றனர்.

எகிறும் எதிர்பார்ப்பு
பாரம்பரிய உடையில் இரண்டு அணிகளாக பிரிந்து ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு விளையாடப்போகின்றனர். அது பார்ப்பதற்கே இன்றைக்கு என்னலாம் நடக்கப் போகுது என்கிற எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைக்கிறது.

பிக்பாஸ் உற்சாகம்
எப்பொழுதும் சண்டை, சச்சரவாக இருந்த வீட்டில், இந்த மாதிரி கொண்டாட்டங்கள் நடக்கும் பொழுது உள்ளே இருப்பவர்களுக்கும், நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுப்பதாகவே இருக்கிறது. இன்னும் நிறைய ஜாலியான பாரம்பரிய போட்டிகள் எல்லாம் இருக்கும் இன்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்களை பாரம்பரிய உடையில் பார்த்து ரசிப்பதற்கான ஆவலும் இருக்கிறது.

ஒற்றுமையாக கொண்டாடுவார்களா
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கும். முடிக்கும் போதுதான் ஏதாவது சண்டை சச்சரவில் முடித்து விடுவார்கள். இன்றைக்கும் ஏதாவது நடக்குமா? இல்லை கொண்டாட்டத்தோடு முடிந்து விடுமா பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications