ஜெயலலிதா இடத்துக்கு வரும் “நயன்தாரா”.. போயஸ் கார்டனுக்கே போட்டியாம் - பின்னணி என்ன?
சென்னை: திரைப்பட கலைஞர் நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு அருகே வீடு வாங்கி பிரமாண்டமாக வடிவமைத்து வருகின்றனர்.
2000 த்தின் தொடக்கத்திலிருந்தே தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளாக விளங்கி வருபவர் நயன்தாரா.
20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கோலோச்சி வரும் இவர் தற்போது நாயகிகளை மையமாக கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாரா
கடந்த சில மாதங்களுக்கு முன் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியானதை தொடர்ந்து தான் காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் அவர் நடித்த O2 என்ற திரைப்படம் வெளியானது.

போயஸ் கார்டன்
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வீடு அருகே தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து வீடு வாங்கி இருக்கிறார். அந்த வீடு ஜெயலலிதா வீட்டிற்கு பின்புறமாகவே அமைந்து இருக்கிறதாம். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய ஜெயலலிதாவின் தீவிர ரசிகை நயன்தாரா என்று கூறப்படுகிறது.

பிரமாண்ட வடிவமைப்பு
3 மற்றும் 4 வது தளங்களை வாங்கி இருக்கும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அதனை மிக பிரம்மாண்டமாக வடிவமைத்து வருகிறார்களாம். அந்த வீட்டின் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் போன்றவர்களின் வீடுகளை வடிவமைத்த மும்பை நிறுவனம் ஒப்பந்தன் செய்யப்பட்டு உள்ளது. அதற்காக மட்டும் ரூ.25 கோடி செலவிடுகிறார்கள்.
Recommended Video

வீட்டின் சிறப்பம்சங்கள்
ஒரு மாடி மட்டுமே 8,250 சதுர அடி என்ற மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. குறிப்பாக வீட்டின் கழிவறை 1,500 சதுர அடியில் அமைய இருக்கிறதாம். அதில் நீர் வீழ்ச்சி போன்ற பல அம்சங்களையும் விலை உயர்ந்த வேலைபாடுகளையும் மேற்கொள்ள உள்ளார்கள். அதுமட்டுமின்றி வீட்டின் பிரமாண்டமான திரையரங்கம் ஒன்றையும் அமைக்க உள்ளார்களாம். வீட்டில் 4 லிஃப்டுகள் அமைக்கப்பட உள்ளதால். அதில் 3 வது லிஃப்டில் மட்டுமே பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்களாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications