முகமூடி அணிந்த மிஸ்டர் தனுஷ்! நிஜத்திலும் நல்லவரா இருங்க! நான் சுயம்பு! இமேஜை சிதைத்த நயன்தாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களை போன்ற சினிமா பின்னணியில் இருந்து வந்தவள் நான் அல்ல என திருமண டாக்குமென்டரி படத்தில் காப்பிரைட் விஷயத்திற்கு நடிகர் தனுஷ் அனுப்பிய நோட்டீஸுக்கு நடிகை நயன்தாரா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரவுடிதான் பட ஷூட்டிங்கின் போது காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.

nayanthara dhanush

இந்த திருமணம் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது இரு ஆண்டுகள் கழித்து இந்த திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளின் ஆவணப்படம் வரும் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் நயன்தாரா காட்டப்பட்டுள்ளார். நயன்தாரா குறித்து நடிகை ராதிகா, நாகார்ஜுனா, அட்லி உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர். இந்த டாக்குமென்டரியில் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற தங்கமே உன்னை தான் என்ற பாடலின் வரிகள் 3 வினாடிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த வரிகளை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்கு ரூ 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ், நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை கண்டித்து நடிகை நயன்தாரா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நானும் ரவுடிதான் படத்தின் பாடலை டாக்குமென்டரியில் பயன்படுத்த நடிகர் தனுஷிடம் அனுமதி கேட்டு 2 ஆண்டுகளாக காத்திருந்தோம். ஆனால் அவர் அனுமதி கொடுக்கவில்லை. அந்த பாடலை பயன்படுத்த தொடர்ந்து அவர் முட்டுக்கட்டை போட்டு வந்தார்.

தயாரிப்பாளரான தனுஷ் ஒரு அரசராக நினைத்து கொள்வதா? பொதுவெளியில் உயர்ந்தவர் போல் தன்னை காட்டிக் கொள்ளும் தனுஷ், நிஜ வாழ்க்கையில் அதில் பாதியளவாவது நடந்து கொள்ள வேண்டும்.

10 ஆண்டுகளாக போலியான முகமூடி அணிந்து வருகிறீர்கள். சட்டப்பூர்வமாக பதில் அளித்தாலும் இறைவன் மூன்பு நீங்கள் பதில் அளிக்க முடியாது. எனக்கு அனுப்பியிருக்கும் நோட்டீஸுக்கு உரிய பதில் அளிப்பேன்.

தங்களுக்கு தெரிந்தவர்கள் வாழ்வில் முன்னேறுவதோ வெற்றி பெறுவதோ தங்களை பாதிக்க போவதில்லை. அடுத்தடுத்து பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நீங்கள் கட்டுக் கதைகளை அவிழ்த்து விடலாம். உங்களை போன்று சினிமா பின்னணியில் இருந்து வந்தவள் நான் இல்லை. மகிழ்வித்து மகிழ் என்பதே உண்மையான மகிழ்ச்சி என நடிகை நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தனுஷின் இமேஜை சிதைக்கும் வகையில் தைரியமாக நயன்தாரா பேசியுள்ளார். இதற்கு தனுஷ் காட்டமான விளக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று அறிக்கை வாயிலாகவோ இல்லை, பிரஸ்மீட் வாயிலாகவே அவர் வெளியிடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+