வாடகைத் தாய் விவகாரம்.. தப்பிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்! சிக்கிய மருத்துவமனை
சென்னை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டதில் விதிமீறல் நடைபெறவில்லை என்றும், மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறியுள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டையர்கள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.
4 மாதத்தில் எப்படி குழந்தை என்பதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். பின்னர் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சொல்லப்படுகிறது. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பிறகுதான் வாடகைத் தாய் முறையை செயல்படுத்த முடியும் என்ற விதி உள்ளது.

4 மாதங்கள்
ஆனால் இவர்களுக்கோ திருமணமாகி 4 மாதங்கள்தான் ஆகிறது. எனவே இதில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த விவகாரம் பெரிதானதால் இதுகுறித்து சுகாதாரத் துறை விசாரணை நடத்த இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நயன்தாராவுக்கு சிகிச்சை அளித்ததாக சொல்லப்படும் சென்னையின் பிரபல மருத்துவமனையில் விசாரணை நடத்தப்பட்டது.

5 ஆண்டுகள்
இந்த நிலையில் தங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்துவிட்டதாக மருத்துவக் குழுவிடம் நயன்தாரா தம்பதி விளக்கமளித்ததாக தெரிகிறது. மேலும் வாடகைத் தாய் சட்டம் அமலாவதற்கு முன்பே இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் விளக்கமளித்ததாக தெரிகிறது.

வாடகைத் தாய் விவகாரம்
இந்த நிலையில் வாடகைத் தாய் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் நேற்று சுகாதாரத் துறை விசாரணை நடத்தியது. அது போல் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பிலும் விளக்கம் பெறப்பட்டுள்ளது.

வெளியான அறிக்கை
இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி, வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரத்தில் விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், "வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றதில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விதிமீறவில்லை. ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிகளின்படியே வாடகைத் தாய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். வாடகைத் தாய்க்கு உரிய வயதும், ஒரு வயதில் ஏற்கனவே ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் பதிவுத் திருமணம் செய்துள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

விதிமீறிய மருத்துவமனை
இதேபோல் குழந்தை பேறு செய்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை செய்த சுகாதாரத்துறை விதிமீறலில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளது. "சினைமுட்டை சிகிச்சை தொடர்பான நோயாளியின் பதிவேடு, சிகிச்சை தொடர்பான முறையாக பராமரிக்கப்படவில்லை. வழிகாட்டு நெறிகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனை நடத்தும் செயற்கை கருத்தரித்த மையத்தை ஏன் மூடக்கூடாது?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications