தனுஷ் சாரால் என் வாழ்க்கையே மாறுச்சு.. விக்னேஷ் சிவனின் வீடியோ வைரல்
சென்னை: நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷ் மோதல் விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது ஆவணப்படம் தொடர்பான விவகாரத்தில் தனுஷின் செயல்களை நயன்தாரா கடுமையாக விமர்சித்துள்ளார். நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனுஷ் குறித்து பேசிய பழைய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதுகுறித்து நயன்தாரா தனுஷை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், நீங்கள் உங்கள் அப்பா, அண்ணன் உதவியுடன் சினிமாத்துறையில் பிரபலமாகியுள்ளீர்கள்.

நான் எந்த பின்புலம் இல்லாமல் கடின உழைப்பாலும், நேர்மையாலும் இந்த நிலையை அடைந்திருக்கிறேன். நானும் ரவுடிதான்' படத்தின் பாடல்களை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுகிறார்கள். அதை என் திருமணம் ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். இது உங்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் புரியும்.
வியாபார ரீதியாகவோ அல்லது காப்புரிமையை காட்டி சட்டரீதியாகவோ மறுத்திருந்தால் பரவாயில்லை. ஆனால் என் மீது உங்களுக்குள்ள தனிப்பட்ட வெறுப்பால் வெளிப்படும் இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்க முடியும். சமீபத்தில் வெளியான எங்கள் திருமண ஆவணப்படம் தொடர்பான டிரெய்லரில் இடம்பெற்ற 3 விநாடி காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பது ஆச்சர்யமாக உள்ளது. என்று கூறியிருந்தார்.
நயன்தாராவின் இந்த கருத்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. நயன்தாராவின் பதிவுக்கு சினிமாத் துறையில் இருந்தும் ஆதரவுகள் வந்து கொண்டிருக்கின்றன. நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருதி ஹாசன், பார்வதி (மரியான் படம்) நஸ்ரியா நசீம், அபிராமி, அனுபமா ஆகியோர் நயன்தாராவின் பதிவை லைக் செய்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முகமூடியுடன் வலம் வரும் உங்களின் நிஜ முகத்தை நானும், என் கணவரும் நன்கு அறிவோம் என்றும் நயன்தாரா கூறியிருந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் பழைய பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்தும் தன்னுடைய திரைப்பயணம் குறித்தும் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.
அதில் விக்னேஷ் சிவன், ஐஸ்வர்யா தனுஷ் மேடம் இயக்கிய வை ராஜா வை படத்தின் போஸ்டரை டிஸைன் செய்தோம். அதன் மூலம் விஐபி படத்தில் போஸ்டர் டிஸைன் செய்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து சாருடன் நட்பு ஏற்பட்டது. விஐபி படம் முழுவதுமே பணியாற்றினேன். படமும் நன்கு ஹிட் ஆனது. அது முடிந்தவுடன், நான் உனக்கு ஏதாவது உதவி செய்கிறேன் என கூறினார்.
அப்போது, என்னிடம் ஒரு கதை உள்ளது. அதை நீங்கள் தயாரித்தால் என் வாழ்க்கையே மாறிவிடும் என்று நான் கூறினேன். உறுதியாக செய்கிறேன் என்று கூறினார். யார் கதாநாயகி என்று கேட்டார். நான் இது கதாநாயகிக்கு வலுவான பாத்திரம் இருக்கிறது என்று கூறினேன். அவர்தான் நயன்தாராவை பார்த்து கதை சொல்ல சொன்னார். என்று கூறினார்.
இது சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. தனக்கு உதவி செய்த தனுஷை விக்னேஷ் சிவன் மனைவி நயன்தாராவை தூண்டி அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளார் என தனுஷ் ரசிகர்கள் கமென்ட் அடித்து வருகிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications