பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நயாரா தனியார் நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.30 வரை உயர்ந்துள்ளதோடு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரை அதிகரித்துள்ளது.

இதன்மூலம் நயாரா பெட்ரோல் பங்க்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று காலை முதல் ரூ.107.93க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் லிட்டருக்கு ரூ.97.22க்கு விற்பனையாகி வருகிறது. தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. அதோடு ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வரும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

nayara petrol diesel

இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் பல நகரங்களில் இந்த பிரச்சனை ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நயாரா நிறுவனம் தற்போது பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது.

நயாரா என்பது தனியார் நிறுவனம். தற்போதைய சூழலில் அங்கு மட்டும் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில் பிற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் பெயரில் இயங்கும் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+