தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை.. தமிழ்நாட்டின் மோசமான சாதனை! 2022ம் ஆண்டில் மட்டும் 57582 வழக்குகள்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது. அதில் மாநில வாரியாக எந்தெந்த குற்றங்கள் அதிகளவில் நடந்துள்ளன என்று பட்டியலிடப்பட்டு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகள் எதிரான குற்றங்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், வெறுப்பு கருத்துக்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் இடம்பெற்று உள்ளன.

இதில் கவலைக்குரிய விசயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக கூறி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு. இதுகுறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது, “தலித்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் அதிகரிப்பது கவலையளிக்கின்றன.
சனவரி 1 - திசம்பர் 31 2022 காலகட்டத்தில் இந்தியாவில் நடந்தேறிய குற்றங்கள் குறித்த அறிக்கையை கடந்த திசம்பர் 3 ஆம் தேதி வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவண காப்பகம். நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிரான குற்றத்துக்காக பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2021ஐக் காட்டிலும் 2022ல் 13.1% அதிகரித்துள்ளன. 2021 - 50,900 வழக்குகள், 2022 - 57,582 வழக்குகள். தலித்துகளுக்கு எதிராக குற்றம் நடைபெறும் விகிதம் 2021 ல் 25.3% இருந்தது, 2022 ல் 28.6% ஆக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
#தலித்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் அதிகரிப்பது
— வன்னி அரசு (@VanniKural) December 11, 2023
கவலையளிக்கின்றன.
சன.1 - திச.31 2022 காலகட்டத்தில் இந்தியாவில் நடந்தேறிய குற்றங்கள் குறித்த அறிக்கையை கடந்த திச.3ஆம் தேதி வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவண காப்பகம்.
நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிரான… pic.twitter.com/EIMVsZiE0q
தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது பெரும் கவலையளிக்கும் செய்தியாக உள்ளது. 2020 - 1274 குற்றங்கள், 2021 - 1377 குற்றங்கள், 2022 - 1761 குற்றங்கள். தமிழ்நாட்டில் சனநாயக சக்திகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் கள எதார்த்த நிலையையே குற்ற ஆவண காப்பக அறிக்கையும் பிரதிபலிக்கிறது.
இதில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல், தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிராக நடைபெற்ற குற்றத்துக்காக பதியப்பட்ட வழக்குகளில், குற்றவாளிகள் தண்டனை பெறும் சதவிகிதம் ஆகும். குற்றவாளிகள் தண்டனை பெறும் சதவிகிதம் வெறும் 21.1% மட்டுமே (தேசிய சராசரி 34%), வழக்குகள் நிலுவையிலுள்ள சதவிகிதம் 90.5% (தேசிய சராசரி 94.4%).” என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications