இப்படியா சொல்லுவீங்க?.. பிரபல செய்தியாளரையும் விட்டு வைக்காத சித்தார்த்.. பழைய போஸ்ட்டால் சர்ச்சை?
சென்னை: பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக கருத்து வெளியிட்டிருந்த நடிகர் சித்தார்த், டிவி நியூஸ் சேனலின் பெண் ஆங்கர் குறித்தும் அவதூறாக கருத்து வெளியிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா புகார் அனுப்பியுள்ளார்.
நடிகர் சித்தார்த் , மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார். அது போல் தமிழகத்தில் முந்தைய ஆட்சி குறித்து கருத்து தெரிவித்த சித்தார்த் தற்போது திமுக ஆட்சியில் மவுனம் காத்து வருவதாக நெட்டிசன்கள் அவர் மீது விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.
இந்த நிலையில் பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடி குறித்து மாநில அரசுக்கு எதிராக பலர் கண்டனங்களை தெரிவித்தனர். அந்த வகையில் கடந்த 5ஆம் தேதி பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால் இந்த நாட்டில் யாருமே தாம் பாதுகாப்பாக இருப்பதாக சொல்லிக் கொள்ள முடியாது என பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் ஒரு ஆளுமை
இந்த கருத்தை எதிர்கருத்தால் வெல்லாமல் நடிகர் சித்தார்த், இந்தியாவின் ஒரு ஆளுமை, பெண் என்றும் பாராமல் இரட்டை அர்த்த வார்த்தையை பயன்படுத்தி நடிகர் சித்தார்த் விமர்சித்திருந்ததாக சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பெண் அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், விளையாட்டு துறையினர் என பாரபட்சம் இன்றி சாய்னாவுக்கு ஆதரவாக நின்றனர்.

ஆபாச கருத்து
இதையடுத்து சித்தார்த்தின் இரட்டை அர்த்த ஆபாச கருத்தை கண்டித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக நடிகர் சித்தார்த் மற்றொரு ட்வீட் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் கண்டனங்கள் வலுத்ததால் அவர் சாய்னாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

முரட்டுத்தனமான ஜோக்
அதில் தனது முரட்டுத்தனமான ஜோக்கிற்கு மன்னிக்கவும் என்றும் நீங்கள் எப்போதுமே என் சாம்பியன் என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கு சாய்னா எந்த வித பதிலையும் சொல்லவில்லை. இந்த நிலையில் தனியார் டிவி சேனல் பெண் ஊழியரையும் சித்தார்த் இது போல் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.

மன்னிப்பு கோரிய சித்தார்த்
இந்த புகாரை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு அனுப்பியுள்ளார். டைம்ஸ் நவ் நவபாரத் சேனலின் பெண் ஆங்கர் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி குறித்து கடந்த 5ஆம் தேதி விவாதம் நடத்திய நிலையில் அவரது விவாத வீடியோவை ரீட்வீட் செய்த சித்தார்த் அவரையும் அவதூறாக பேசியிருந்தார்.
Recommended Video

டிவி பெண் ஆங்கர் மீதும் சித்தார்த் அவதூறு
சித்தார்த்தின் அவதூறு ட்வீட் குறித்து தமிழக டிஜிபி சைலந்திர பாபுவுக்கு ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார். அதில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டு வரும் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் இது போன்ற கருத்துகளை அவர் வெளியிட மாட்டார் என தேசிய மகளிர் ஆணையம் தனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications