களத்தில் இறங்கிய தேசிய மகளிர் ஆணையம்! அருள் விக்னேஷ் மீதான புகாரில் விசாரணை நடத்த டிஜிபிக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்த புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். நேர்மையான் நேர்மையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து, அரசியல் அழுத்தம் இன்றி விசாரித்து 7 நாட்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

NCW Takes Suo Motu Cognizance of Complaint Against TVK MLA Arul Vignesh

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகி அது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எம்எல்ஏவுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். எனினும் தவெக எம்எல்ஏவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் திமுக சார்பில் நேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்த புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். நேர்மையான் நேர்மையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து, அரசியல் அழுத்தம் இன்றி விசாரித்து 7 நாட்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+