Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ்க்கு (தமாக) 5 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3 தொகுதிகளில் திமுகவின் அமைச்சர்கள் எம்எல்ஏவாக உள்ள நிலையில் இன்னொரு தொகுதி திமுகவின் கோட்டையாகும், மற்றொரு தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவும் உள்ளது. இதனால் 5 தொகுதிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் வெல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்த கூட்டணியில் தமாகவிற்கு மொத்தம் 5 தொகுதிகள் துக்கீடு செய்யப்பட்டன.

tmk gk vasan tamil nadu assembly election

ஜிகே வாசனின் தமாகவிற்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை என மொத்தம் 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஜிகே வாசன் அறிவித்தார்.

3 அமைச்சர்கள் தொகுதியில் தமாக

இந்த 5 தொகுதிகளிலும் ஜிகே வாசனின் தமாக வேட்பாளர்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனர். கடந்த முறை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தமாக போட்டியிட்ட நிலையில் அவர் இந்த முறை தாமரையில் களமிறங்க உள்ளார். தமாகவை எடுத்து கொண்டால் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பெரியளவில் செல்வாக்கு இல்லாத கட்சியாக உள்ளது. இப்படியான சூழலில் தான் அதிமுக - பாஜக கூட்டணியில் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சட்டசபை தொகுதிகள் பேசும் பொருளாகி உள்ளது.

ஏனென்றால் பெரியளவில் கட்டமைப்பு இல்லாத தமாக 3 தொகுதிகளில் திமுகவின் அமைச்சர்களை எதிர்கொள்கிறது. அதேபோல் மீதமுள்ள 2 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பலமாக உள்ளனர். தமாகவிற்கு வழங்கப்பட்ட சட்டசபை தொகுதிகளின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

ஒட்டன்சத்திரம்

ஒட்டன் சத்திரம் சட்டசபை தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக திமுக அமைச்சர் சக்கரபாணி உள்ளார். இது சக்கரபாணியின் கோட்டையாகும். 1996 முதல் 2021 வரை 6 சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து சக்கரபாணி வெற்றி பெற்று வருகிறார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சக்கரபாணி 109,970 ஓட்டுகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் என்பி நடராஜ் 81,228 ஓட்டுகள் வாங்கியிருந்தார். இதனால் சக்கரபாணி 28,742 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக அமைச்சர் முத்துசாமி இருக்கிறார். இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 1 லட்சத்து 757 ஓட்டுகள் வாங்கி வென்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் கேவி ராமலிங்கம் 78,668 வாக்குகள் மட்டுமே பெற்றதால் முத்துசாமி 22,089 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். மீண்டும் அவர் போட்டியிடலாம் என்பதால் தமாகவிற்கு பெரிய சவால் உள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சட்டசபை தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக அமைச்சர் காந்தி உள்ளார். இவர் இந்த தொகுதியில் 3வது முறையாக எம்எல்ஏவாகி உள்ளார். கடந்த 2016, 2021 தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். 2021 தேர்தலில் காந்தி 103,291 ஓட்டுகள் வாங்கிய நிலையில் அதிமுக வேட்பாளர் சுகுமார் 86,793 வாக்குகள் பெற்றார். இதனால் காந்தி 16,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை திமுகவில் அமைச்சர் காந்தி அல்லது அவரது மகன் களமிறங்கலாம். இதனால் அங்கும் போட்டி சாதாரணமாக இருக்காது.

கும்பகோணம்

கும்பகோணம் சட்டசபை தொகுதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக திமுகவின் சாக்கோட்டை அன்பழகன் உள்ளார். இவர் கடந்த 2011, 2016, 2021 என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் சாக்கோட்டை அன்பழகன் 96,057 ஓட்டுகள் பெற்று அதிமுகவில் போட்டியிட்ட ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையாரை (பெற்ற வாக்குகள் 74,674) 21,383 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

மேலும் கும்பகோணம் சட்டசபை தொகுதியை எடுத்து கொண்டால் இது திமுகவின் கோட்டையாக உள்ளது. இதுவரை மொத்தம் 16 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளது. இதில் நிறுவன காங்கிரஸ் ஒருமுறை, அதிமுக 2 முறை, 6 முறை காங்கிரஸ், 7 முறை திமுகவும் வென்றுள்ளது. அதிலும் 1996 பிறகு அனைத்து தேர்தல்களிலும் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. தற்போதை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் 4வது முறையாக களமிறங்கி வெல்லும் முனைப்பில் உள்ளார். இதனால் கும்பகோணம் சட்டசபை தொகுதியில் வெல்லவும், தமாக போராட தான் செய்ய வேண்டும்.

கிள்ளியூர் சட்டசபை தொகுதி

கிள்ளியூர் சட்டசபை தொகுதி என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஷ் குமார் 2வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2016 தேர்தலில் ராஜேஷ் குமார் 77,356 ஓட்டுகள் வாங்கி பாஜக வேட்பாளர் பொன் விஜயராகவனை (பெற்ற வாக்குகள் 31,061) 46,295 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் ராஜேஷ் குமார் 1,01,541 ஓட்டுகள் வாங்கி அதிமுக வேட்பாளர் கேவி ஜூட்தேவ்வை (வாங்கிய ஓட்டுகள் 46,141) 55,400 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ராஜேஷ் குமார் பலமாக அங்கு இருக்கிறார். மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக பலமாக இருந்தாலும் கூட அதிமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளது. இதற்கு கடந்த 2024 லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரியில் அதிமுக டெபாசிட் இழந்ததே உதாரணம். இருப்பினும் கூட இந்த தொகுதியில் 1996, 2001 ஆகிய சட்டசபை தேர்தல்களில் தமாக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. குமாரதாஸ் என்பவர் வென்றார்.

அதன்பிறகு தொடர்ந்து காங்கிரஸ் தான் 2006, 2011, 2016, 2021 என்று 4 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2016 தேர்தலில் தமாக சார்பில் முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் களமிறங்கியபோது வெறும் 13,704 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் கிள்ளியூர் தொகுதியில் நிச்சயம் ஜிகே வாசனின் தமாக வெற்றிக்கு போராட வேண்டியிருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+