Vijay : எடப்பாடி பழனிசாமியை மாற்றினால் என்டிஏ.. இல்லாவிட்டால் விஜய்.. பாஜகவுக்கு வந்த புதிய சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் வருகை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை பாதித்திருக்கிறதோ இல்லையோ.. அதிமுகவையும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலாகி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் ஒரு பக்கம் செங்கோட்டையன் எப்படியாவது அதிமுகவை நீக்கப்பட்டவர்களை சேர்க்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். மறுபக்கம், ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவருமே எடப்பாடி பழனிசாமியை மாற்றினால் என்டிஏ கூட்டணி.. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் விஜய் என்கிற ரீதியில் இருக்கிறார்களாம்.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது. அவர் ஆக்டிவ் பாலிடிக்ஸில் இப்போது தான் முழுமையாக இறங்கி உள்ளார். சட்டசபை தேர்தலுக்கு 9 மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே பிரச்சாரத்தை விஜய் தொடங்கி உள்ளார். நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விஜய் எங்கு சென்றாலும், அவரை காண ஏராளமான தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

NDA alliance if Edappadi Palaniswami replaces otherwise Vijay New problem for BJP

விஜய் அரசியல்

விஜய்யின் அரசியல் எப்படி இருக்க போகிறது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை..அவரது கொள்கைகள், திட்டங்கள் குறித்து எப்போது அறிவிப்பார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் விஜய், ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சிக்கிறார். பாஜகவை கூட ஓரளவு விமர்சிக்கிறார். ஆனால் அதிமுகவை விமர்சிக்கவே இல்லை. அதிமுகவின் வாக்காளர்களை மொத்தமாக கவருவதற்காக ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுத்து வருகிறார். இதனால் திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அதிமுகவிற்கு பதில் தனக்கு விழும் என்று விஜய் நம்புகிறார். அது சரியாக அமைந்தால் ஆட்சியை பிடிக்கலாம் அல்லது வலுவான எதிர்க்கட்சியாக அமரலாம் என விஜய் கணக்கு போடுகிறார்.

அதிமுக கூட்டணி

எனவே ஆளும் கட்சியான திமுகவைவிட அதிமுகவிற்கும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இது நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் எனில், எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று பாஜக மேலிடம் அறிவித்து கூட்டணி வைத்துள்ளதால், அதிமுகவில் இருந்து பிரிந்த ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து என்டிஏ கூட்டணியான, பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ளன. தேமுதிக, பாமகவும் சேருமா என்பது தெரியவில்லை..

ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் நிபந்தனை

இதனால் அதிர்ச்சியில் உள்ள பாஜக, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்ய முயற்சித்து வருகிறதாம். ஆனால் இருவருமே ஒரே நிபந்தனையாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி வேண்டாம்.. வேறு யாரை வேண்டுமானாலும் முதல்வராக்குங்கள், நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறுகிறார்களாம்..இது பாஜகவிற்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் என இருவருமே, எடப்பாடியை மாற்றினால் என்டிஏ.. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் விஜய் என்று தயாராகி வருகிறார்களாம்.

விஜய் கூட்டணி எப்படி இருக்கும்

ஒருவேளை விஜய் உடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன் சென்றால், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகளும் விஜய் உடன் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் தேமுதிக, பாமகவும் அவருடன் கை கோர்த்தால், அது பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

பாஜகவிற்கு சிக்கல்

ஏனெனில் விஜய் ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று கூறியுள்ளதால், கூட்டணி கணக்குகள் எப்படி வேண்டுமானாலும் மாற வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.. அதேநேரம் அந்த அளவிற்கு பாஜக கொண்டு செல்லாது என்று சொல்கிறார்கள். இந்த தேர்தல் விஜய் வருகையால், எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல, பாஜகவின் முயற்சிக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள். அதேபோல் அரசியலில் குழப்பான நிலையை பலருக்கும் ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+