Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமமுக களமிறங்கும் 11 தொகுதிகள் இதுதான்.. கேஎன் நேரு உள்பட 3 அமைச்சர்கள் + சீமானை எதிர்த்து போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட உள்ள 11 தொகுதிகளின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுகவின் அமைச்சர்களாக இருக்கும் கேஎன் நேரு, மா சுப்பிரமணியன், டிஆர்பி ராஜா மற்றும் நாம் தமிழர் தலை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை எதிர்த்து அமமுக களமிறங்க உள்ளது.

nda-alliance-what-are-the-11-constituencies-where-ttv-dhinakarans-ammk-contest-in-tamil-nadu-assem

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளது. இந்த கூட்டணியில் அமமுகவிற்கு 11 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இருப்பினும் எந்தெந்த தொகுதிகள் என்று அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் இன்று சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சியின் தலைவரும், கூட்டணியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகின்றன என்ற அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அமமுகவிற்கான தொகுதிகள் வெளியிடப்பட்டது.

11 தொகுதிகள் என்னென்ன?

அதன்படி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு:-

* தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டசபை தொகுதி

* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி

* தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு

* சிவகங்கை மாவட்டம் காரைக்குடி

* வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்

* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி

* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்

* திருச்சி மேற்கு

* சென்னையில் சைதாப்பேட்டை

* சென்னை பூந்தமல்லி

* திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் உள்ளிட்ட 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

8 பொது + 3 தனி தொகுதி

இந்த தொகுதிகளில் அமமுக குக்கர் சின்னத்தில் களமிறங்க உள்ளது. இதில் பெரியகுளம், ஒட்டப்பிடாரம், பூந்தமல்லி என 3 தொகுதிகள் தனி தொகுதிகளாகும். மீதமுள்ள 8 தொகுதிகள் பொதுத்தொகுதிகளாகும். இதையடுத்து எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வேட்பாளர்? என்பதை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விரைவில் அறிவிக்க உள்ளது.

கேஎன் நேருவை எதிர்க்கும் அமமுக

இதில் திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கேஎன் நேரு எம்எல்ஏவாக உள்ளார். இவர் கந்த 2016, 2021ல் இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் அவர் களமிறங்கலாம் என கூறப்படும் நிலையில் அவரை அமமுக எதிர்கொள்ள உள்ளது.

மா சுப்பிரமணியன்

அதேபோல் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தற்போது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த 2016, 2021 சட்டசபை தேர்தலில் அங்கு வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் அவர் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில் அமமுக களமிறக்கப்பட்டுள்ளது.

டிஆர்பி ராஜா

அதேபோல் மன்னார்குடி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக தற்போதைய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இவர் 2011,2016, 2021 ஆகிய 3 சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் அவர் களமிறங்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் அமமுக, திமுகவின் 3 அமைச்சர்களின் தொகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளது.

சீமான் தொகுதி

மேலும்அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட சிவங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளார். இதனால் இந்த தொகுதிகளில் அமமுக கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+