7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!
சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. அவரது கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் அதிமுக உள்ளது. இந்த கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமிக்கு பகையாளியாக இருந்த டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளது.

இந்த கூட்டணியில் திரைமறைவில் கட்சிகள் தொகுதி பங்கீடு பற்றி பேசி வருகின்றன. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அமமுகவுக்கு 9 தொகுதிகள்
இந்த கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மொத்தம் 13 சட்டசபை தொகுதிகளை கோரியது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதனை ஏற்கவில்லை. இறுதியாக 9 சட்டசபை தொகுதிகள் வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்க எடப்பாடி பழனிச்சாமி முன்வந்துள்ளார். இதுதொடர்பாக விரைவில் அதிமுக உடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
திருச்சியில் இன்று என்டிஏ கூட்டணியில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். அதன்பிறகு நாளை முதல் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கி ஒப்பந்தம் செய்ய உள்ளது.
எந்தெந்த தொகுதிகள்?
இதற்கிடையே தான் தமிழக சட்டசபை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு அதிமுக - பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட உள்ள சட்டசபை தொகுதிகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கர், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் (தனி), திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, புதுக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் அரூர்(தனி), மதுரை மாவட்டம் மேலூர், தஞ்சை மாவட்டம் பாநாசம், திருச்சி மாவட்டம் முசிறி உள்ளிட்ட சட்டசபை தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்டது எப்படி?
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் பட்டியலை பாஜகவிடம் வழங்கி உள்ளது. அது எடப்பாடி பழனிச்சாமி கைக்கு சென்ற நிலையில் அதனை பரிசீலனை செய்து இந்த 9 சட்டசபை தொகுதிகளையும் அமமுகவுக்கு ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரன் எங்கு போட்டி?
இதில் டிடிவி தினகரன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. இதுபற்றி அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்து இருந்தார். இதனால் அவர் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.
அதேபோல் பாஜக சார்பில் 60 தொகுதிகள் கோரப்பட்ட நிலையில் 29 தொகுதிகளை வழங்க எடப்பாடி பழனிச்சாமி முன்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications