எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்
சென்னை: தமிழகத்தில் பிரசாரத்துக்கு வரும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளார் என்று கூறுவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தான் அதன் பின்னணி உள்ள விஷயம் பற்றிய முக்கியமான தகவலை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விளக்கி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. பாஜக சார்பில் கூட்டணி ஆட்சி என்றும், என்டிஏ ஆட்சி என்றும் பிரதமர் மோடி, அமித்ஷா கூறி வருகின்றனர். அதற்கு அதிமுகவினர் கூட்டணி ஆட்சி கிடையாது.

தனி மெஜாரிட்டியுடன் அதிமுக ஆட்சி அமையும் என்று கூறி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டணி ஆட்சி கிடையாது, அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் இதனை உறுதியாக கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளர் என்று கூறுவது இல்லை. மாறாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டும் தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளர் என்று கூறி வருகிறார்.
குருமூர்த்தியிடம் கேள்வி
இந்நிலையில் தான் 'துக்ளக்' பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ''பிரதமரோ, அமித்ஷாவோ தமிழ்நாடு வரும்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளர் என அறிவிப்பு செய்யாமல் உள்ளனர். என்டிஏவுக்கு வாக்களியுங்கள் என்று கூறுகிறார்களே தவிர, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது இல்லை. இந்த தயக்கம் ஏன்?'' என்ற கேள்வியை முன்வைத்தார். இதற்கு துக்ளக் குருமூர்த்தி பதிலளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:
லாபமும் இருக்கு - நஷ்டமும் இருக்கு
''இவரை (எடப்பாடி பழனிச்சாமி) அங்கீகரிப்பதில் லாபமும் இருக்கு. நஷ்டமும் இருக்கு என்று நினைக்கிறார்கள். ஸ்டாலினுக்கு இருக்கும் அட்வான்டேஜ் என்னவென்றால் அவர் முதல்வராக இருக்கிறார். ராகுல் காந்தியை எடுத்து கொண்டால் 2014, 2019ல் பிரதமர் வேட்பாளராக யாரும் அறிவிக்கவில்லை. ஆனால் காங்கிரஸில் பிரதமர் வேட்பாளர் முகமாக அவர் தான் இருந்தார். அதை அறிவிப்பதன் வழியாக சில லாபமும் உண்டு. நஷ்டமும் உண்டு. காங்கிரஸ் கட்சியே அதனால் அவரை அறிவிக்கவில்லை.
2019ல் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும்படி சோனியா காந்தி கூறியதால் தமிழ்நாட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசியலில் தனிப்பட்ட தலைவருக்கு இருக்கும் செல்வாக்கு. அதன் மூலமாக மக்களால் அவர் ஏற்கப்படும் தன்மை தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது என நினைக்கிறேன்.
ஸ்டாலின் - எடப்பாடிக்கு திறமை இல்லை
மேலும், அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் என அவர் (எடப்பாடி பழனிச்சாமி) சொல்கிறார். இதுதவிர கூட்டணி ஆட்சி என்பது ஒன்று. ஆட்சியில் பங்கு இருக்கிறதா? இல்லையா? என்பது 2வது. 2006ல் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காதபோதும் முழு ஆட்சியை நடத்திய பெருமை கருணாநிதிக்கு மட்டும் தான் உண்டு. மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்று இங்கு பங்கு கொடுக்காமல் அவர் ஆட்சி நடத்தினார். அப்போது 25, 26 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா கூறினார். ஆனாலும் ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை
அத்தகைய திறமை ஸ்டாலினுக்கோ, எடப்பாடிக்கோ கிடையாது. திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சியில் பங்கு தரமாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு ஸ்டாலினுக்கு ஆளுமை கிடையாது. கருணாநிதிக்கு சென்ட்ரலில் ஒரு பிடிப்பு இருந்தது. இப்போது கிடையாது. தமிழகத்தின் தற்போதைய நிலையை பார்த்தால் எந்த பிரதான கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உள்ளது. அதிமுக, திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை வரவ வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.
கூட்டணி ஆட்சி வரலாம்
2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரலாம். அதை நோக்கி செல்வதாக நான் கருதுகிறேன். அதேவேளையில் கூட்டணி ஆட்சி கிடையாது என ஸ்டாலின், எடப்பாடி ஆகியோரை அப்படியான 'ஸ்டேண்ட்' எடுப்பது சரிதான். ஆனால் நாம் எந்த மாதிரியான திசையில் நாம் போய் கொண்டிருக்கிறோம் என்றால் கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பு உள்ளது.
அப்போது கூட்டணி ஆட்சியில் பங்கு தரமாட்டேன் என அதிமுக -திமுக சொல்வது இல்லை. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நல்லது என்று தோன்றுகிறது. ஏனென்றால் இந்த 2 கட்சிகளும் 60 ஆண்டுகளில் செய்த ஊழல்கள் எல்லாம் எந்த கட்சிக்கு கொடுத்தாலும் அப்படித்தனா் நடக்கும். கூட்டணி ஆட்சி இருந்தால் டைனமிக்ஸ் மாறும்'' என்றார்.
-
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications