வன்னியர் + தலித் + தேவர் + நாடார்.. ஓட்டுகளை அள்ள பாஜக மெகாபிளான்.. பீகாரில் வென்ற அதே யுக்தி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் பாஜக பாஜக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் ‛பீகார் பாணி'யை பாஜக கையில் எடுத்து செயல்பட்டு வருகிறது. பாஜகவின் இந்த வியூகம் பீகாரில் கைக்கொடுத்த நிலையில் தமிழகத்திலும் கைக்கொடுக்கும் என்று நம்புகிறது. பாஜகவின் இந்த வியூகம் பற்றிய முழு விவரம் வருமாறு:
கடந்த ஆண்டு பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய ஜாதிகளை பின்புலமாக கொண்ட கட்சியினரை ஒருங்கிணைத்து பாஜக கூட்டணி அமைத்தது தான் முக்கிய காரணம்.
ஆனால் தமிழக அரசியலில் பாஜக காலுன்ற முயன்றும் இன்னும் சாத்தியமாகவில்லை. கடந்த 1967ம் ஆண்டுக்கு பிறகு திமுக அல்லது அதிமுக தான் மாற்றி மாற்றி ஆட்சியை பிடித்து வருகின்றன.

இப்போதும் இந்த இரு கட்சிகளின் கூட்டணி தான் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இதனால் தான் மாற்றத்தை உருவாக்குவதாக தமிழகத்தில் பல கட்சிகள் வந்தாலும் கூட அவர்களும் கடைசியாக திமுக, அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்கின்றன.
இதற்கு சமீபத்திய உதாரணமாக இருக்கிறார் கமல்ஹாசன்.. திமுகவை விமர்சித்து டிவியை உடைத்த கமல்ஹாசன்.. இப்போது அந்த கூட்டணியில் இருந்து ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். இதுதான் தற்போதைய தமிழக நிலை.
பாஜக வியூகம்
இந்நிலையில் தான் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் திமுக, அதிமுக ஆகியவை தங்களின் கூட்டணியை பலப்படுத்திவ ருகின்றன. தமிழகத்திலும் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. எப்படியாவது திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதனால் தான் கூட்டணியில் ஓட்டுகள் சிதறுவதை தடுக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு உள்ளது.
முக்குலத்தோர் ஓட்டுகளுக்கு..
மேலும் அதிமுகவில் பிரிந்தவர்களை ஒன்றிணைத்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கொண்டு வந்துள்ளது. ஓ பன்னீர் செல்வத்தை கூட்டணிக்குள் கொண்டு வரும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனால் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டுகளை அப்படியே பெற முடியும் என்று பாஜக நினைக்கிறது.
கவுண்டர் சமுதாய ஓட்டுகளுக்கு..
அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர், பாஜகவிலும் அண்ணாமலை உள்பட கொங்கு மண்டலத்தை சேர்ந்த கவுண்டர் சமுதாயத்தினர் நிறைய பேர் உள்ளனர். அதிமுகவிற்கும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு உள்ளது. இதனால் கொங்கு மண்டல ஓட்டுகளை அதிமுக - பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது.
வன்னியர் சமுதாய ஓட்டுகளுக்கு..
அதேபோல் வடமாவட்டங்களில் அதிகளவில் வன்னியர்கள் உள்ளன. இவர்களின் ஓட்டுகளை கூட்டணியில் பாமக அன்புமணி ராமதாஸ் அணி கொண்டு வர உள்ளது. அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரும் இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இதனால் அவரும் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. இது நடக்கும் பட்சத்தில் வன்னியர்களின் ஓட்டுகள் கொத்தாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு விழும்.
தலித் மக்களின் ஓட்டுகள்
தமிழகத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 20 சதவீதத்துக்கும் மேலாக உள்ளன. இவர்களின் ஓட்டுகள் திமுக, அதிமுக, விசிக உள்பட இன்னும் பல கட்சிகளுக்கு உள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜான் பாண்டியனை பாஜக கூட்டணியில் வைத்துள்ளது இதன்மூலம் தென்மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் ஓட்டுகளை கிடைக்கும்.
அதேபோல் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமியும் இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. அவரையும் கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக - பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது நடக்கும் பட்சத்தில் தென்மாவட்டங்களில் உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் ஓட்டுகள் கிடைக்கும்.
அதுமட்டுமின்ற பாஜகவின் எல் முருகன் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். அவர் மூலம் அந்த சமுதாய ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
பறையர் சமுதாயத்தினர்
அதேவேளையில் வடமாநிலங்களில் அதிகம் உள்ள பறையர் சமுதாய வாக்குகள் விசிக வசம் உள்ளன. விசிகவின் திருமாவளவன் திமுக கூட்டணியில் உள்ளார். இதனால் அந்த ஓட்டுகள் திமுகவுக்கு கிடைக்கும். இருப்பினும் விஜய் தற்போது கட்சி தொடங்கி உள்ளதால் அது திமுக மற்றும் விசிகவுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் பாதிக்கும் என்று பாஜக ஹேப்பியாகி உள்ளது.
நாடார் சமுதாய ஓட்டுகள்
அதேபோல் நாடார் சமுதாயத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், சரத்குமார் உள்ளிட்டவர்கள் பாஜகவில் உள்ளனர். இதனால் தென்மாவட்டங்களில் பரவி உள்ள நாடார் மக்களின் ஓட்டுகளை இவர்களை வைத்து ஒருங்கிணைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
உடையார் - துளுவ வெள்ளாளர்
இதுதவிர ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் , ஐஜேகே கட்சியின் பாரிவேந்தர் வழியாக உடையார் சமுதாய வாக்குகளையும், அதேபோல் ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி மூலமாக துளுவ வெள்ளாளர் சமுதாய வாக்குகளையும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
இப்படியாக தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர், கவுண்டர், நாடார், தலித் உள்பட பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களின் ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் பணியில் தலைவர்களை ஓரணியில் இணைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பீகாரில் என்ன நடந்தது?
முன்னதாக பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து இருந்தது. இந்த கூட்டணியில் பீகாரில் வசிக்கும் அனைத்து ஜாதிகளை சேர்ந்த தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர். முன்னேறிய ஜாதி மற்றும் பனியா மக்களின் ஓட்டுகளை கவர பாஜகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை கவர நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை பிரதிநிதித்துவப்படுத்த ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சி உள்ளிட்டவை கூட்டணியில் இருந்தன.
தலித் மக்களின் ஓட்டுகளை கவரும் வகையில் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின். லோக் ஜனசக்தி (LJP) மற்றும் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) கட்சிகள் கூட்டணியில் இருந்தது. யாதவர் மற்றும் இஸ்லாமியர்கள் ஓட்டுகள் மட்டுமே தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்தது.
இதனால் 243 சட்டசபை தொகுதிகளை கொண்ட பீகாரில் 202 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. அந்த வகையில் தான் அனைத்து ஜாதி மக்களின் ஓட்டுகளை கவரும் வகையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியை வடிவமைத்து வருகிறது பாஜக என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications