கைமாறிய சுகாதாரத்துறை.. ஜேபி நட்டாவிற்கு போன "ஹெல்த் மினிஸ்டர்" இலாக்கா.. மோடி முக்கிய முடிவு
சென்னை: முதல்முறை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வாகி உள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எனப்படும் இந்த துறையின் அமைச்சராக கடந்த முறை மன்சுவிக் மாண்டவியா இருந் நிலையில் நட்டா அந்த துறையை பெற்றுள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் தனிப்பட்ட வகையில் பாஜக தனிப்பட்ட வகையில் பெற முடியாமல் படுதோல்வி அடைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும் பாஜக தனிப்பட்ட வகையில் மெஜாரிட்டியை இழந்து உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 40 இடங்களை வைத்து இருக்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார், ஷிண்டே சிவசேனா ஆகியோரின் உதவிதான் மோடி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது
தலைவர் மாற்றம்: இந்த நிலையில்தான் பாஜகவின் தேசிய தலைவராக இருக்கும் ஜே பி நட்டா மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நட்டாவின் மாற்றம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. நேற்று அவர் அமைச்சராக தேர்வானார். அதோடு முதல்முறை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா சுகாதாரத்துறை அமைச்சராக தேர்வாகி உள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எனப்படும் இந்த துறையின் அமைச்சராக கடந்த முறை மன்சுவிக் மாண்டவியா இருந் நிலையில் நட்டா அந்த துறையை பெற்றுள்ளார்.
தலைவர் மாற்றம்: இத்தனை நாட்கள் வேறும் தேசிய தலைவராக இருந்த அவர் அமைச்சராகி உள்ளார். அவர் பாஜக சட்டப்படி இரண்டு பொறுப்புகளில் இருக்க முடியாது என்பதால் பாஜக தேசிய தலைவர் பதவியில் நீடிக்க முடியாது.
இது போக பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய தலைவர்.
சிவராஜ் சிங் சவுகான் இந்த லோக்சபா தேர்தலில் ஓரங்கட்டப்பட்டார். மோடி, நட்டா, அமித் ஷா மூலம் பிரச்சாரத்திற்கு கூட கொண்டு வரப்படாமல் ஓரம்கட்டப்பட்டார். முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டு வீட்டில் அமர வைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் அழுத்தம் காரணமாக தற்போது சிவராஜ் சிங் சவுகான் ஆக்டிவ் அரசியலுக்குள் மீண்டும் நுழைந்து உள்ளார். ஆனால் அவரும் தற்போது அமைச்சராகி உள்ளார்.
யார் அடுத்த தலைவர்?: அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் அவர் அமைச்சர் ஆவதால் வேறு ஒருவர் பாஜக தலைவராக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆர்எஸ்எஸ் சார்பாக ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் தலைவருக்கான லிஸ்ட்ல பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர்












Click it and Unblock the Notifications