பாஜக சூப்பர்.. நல்ல வேகமாக சாலை போட்டு இருக்காங்க.. புகழ்ந்து தள்ளிய ப.சிதம்பரம்!
பாஜக ஆட்சியில் சாலைகள் அதிக அளவில் வேகமாக போடப்பட்டு இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பாஜக ஆட்சியில் சாலைகள் அதிக அளவில் வேகமாக போடப்பட்டு இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.
பாஜக கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். பாஜக போடும் திட்டங்களுக்கு புள்ளி விவரத்துடன் பதிலடி கொடுக்க கூடியவர் ப. சிதம்பரம்.
ஆனால் அவரே தற்போது பாஜக அரசை பாராட்டி பேசி இருக்கிறார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் பாஜக ஆட்சி குறித்து பேசினார்.

என்ன பேசினார்
ப. சிதம்பரம் தனது பேச்சில், காங்கிரஸ் கட்சி 5 முறை முழுதாக கங்கையை சுத்தம் செய்ய முயன்றது. ஆனால் கொஞ்சம் கூட முடியவில்லை. பாஜக அரசு கங்கையை சுத்தம் செய்யவில்லை. ஆனால் குறிப்பிடத்தகுந்த அளவில் பணிகளை கங்கையை சுத்தம் செய்வதில் பாஜக காட்டி இருக்கிறது. இதில் பாஜக எங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது.

நல்லது
தற்போதைய பாஜக ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் வேகமாக போடப்படுகிறது. சாலை போக்குவரத்துத்துறையில் பாஜக வேகமாக செயல்படுவது உண்மைதான். அதை ஏற்றுக்கொள்கிறேன்.

சாலை திட்டம்
காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டதை விட அவர்கள் அதிக வேகமாக சாலைகளை போடுகிறார்கள். நிறைய தூரத்திற்கு பாஜக ஆட்சியில் சாலை போடப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதை பின்பற்றும். காங்கிரஸ் இதைவிட வேகமாக சாலை போட முயற்சி எடுக்கும்.

ஆனாலும்
பாஜக ஆட்சி சரியான ஆட்சி கிடையாது. அவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் சில சமயங்களில் மோசமான அரசும் கூட ஏதாவது ஒரு நல்ல விஷயம் செய்திருக்கும். அப்படித்தான் பாஜக ஆட்சி சாலைகளை அதிக அளவில் போட்டுள்ளது. ஆனால் பாஜக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற மோசமான திட்டங்களையும் பாஜகதான் கொண்டு வந்தது. இதை யாராலும் மறுக்க முடியாது என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications