கூட்டணி ஓகே.. டிடிவி தினகரனின் இரட்டை இலை வழக்கு இருக்கே.. அது என்னவாகும்? செந்தில்வேல் கேட்ட கேள்வி
சென்னை: மதுராந்தகத்தில் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். இதற்கிடையே டிடிவி தினகரன் வந்தாலும் கூட இன்னுமே கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர் செந்தில் வேல் தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் ஒரு பிரம்மாண்டக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேலும், என்டிஏ கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக அதிமுக குழப்பத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் ஒரே மேடையில் ஏறினர். இருவரும் கைகொடுத்து வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.

என்டிஏ கூட்டணி
இருவருக்கும் இடையே உறவு சீரானாலும் கூட இந்தக் கூட்டணியில் பல சிக்கல்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர் செந்தில் வேல் குறிப்பிடுகிறார். இது தொடர்பாகப் புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த அவர் பேட்டியில், "திமுகவுக்கு இந்த பொதுக்கூட்டம் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தான் கொடுத்திருக்கும். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அதிக முறை வரும்போது திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கவே செய்யும்.
பிரதமர் மோடியின் பேச்சு நகைச்சுவையின் உச்சமாகவே இருந்தது. பியூஷ் கோயலையும் அன்புமணியையும் அருகே வைத்துக் கொண்டு வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். ஊழலை ஒழிப்போம் என சொல்லிவிட்டு, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வருவோம் என்கிறார்.
இரட்டை இலை வழக்கு
இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. என்டிஏ கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு என்னவானது என யாருக்கும் தெரியாது.
அன்புமணி மீதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு இடம் கொடுப்பதில் ஊழல் நடந்ததாகச் சொன்ன வழக்கு நிலுவையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி என அனைவரையும் ஊழல் வழக்குகளைக் காட்டி மிரட்டி கூட்டணியில் சேர்த்துவிட்டு ஊழலை ஒழிக்கிறோம்.. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வருகிறோம் என்கிறார். இது மற்ற வட இந்திய மாநிலங்களில் வேலை செய்யுமே தவிரத் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். அதை நம்பவும் மாட்டார்கள்.
தமிழர்கள் மீது குற்றச்சாட்டு
ஒடிசா தேர்தலில் தமிழர்களைத் திருடர்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தனர். அதை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். ஒடிசாவில் தமிழர் ஒருவர் பீகாரை ஆளலாமா எனப் பிரச்சாரம் செய்தனர். பீகார் தேர்தல் சமயத்தில்.. தமிழகத்தில் காரிகள் அவமானப்படுத்தப்படுவதாக அபாண்டமாகப் பழி சுமத்தினார்கள். அப்படி எல்லாம் பேசிவிட்டு, இன்று திடீரென தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை கொண்டது போலப் பேசுவதைத் தமிழர்கள் நம்பப் போவதில்லை.
ஏகப்பட்ட சிக்கல்கள்
மோடியும் அமித் ஷாவும் என்டிஏ கூட்டணி ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு அனைவரும் சேர்ந்து பேசியே அமைச்சரவையை உறுதி செய்கிறோம் என்றவர் அமித் ஷா! அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தனித்து ஆட்சி என்கிறார். மற்றொரு பக்கம் டிடிவி தினகரன் இந்த நிமிடம் வரை அதிமுக ஆட்சி என்றோ எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்றோ சொல்லவில்லை. பாமகவிலும் அன்புமணி- ராமதாஸ் இடையே மோதல் தொடர்கிறது. இந்தக் கூட்டணி பொருந்தாத கூட்டணி.. கட்டாயத் திருமணம் போல இது நிச்சயம் விவாகரத்தில் தான் முடியும்!" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications