புதுவையில் நூலிழையில் ஆட்சியை தக்க வைக்கும் என்டிஏ! இந்தியா கூட்டணிக்கு 13 இடங்கள்! JVC எக்ஸிட் போல்
சென்னை: புதுவையில் நூலிழையில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று JVC எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது. புதுவையில் என்.டி.ஏ கூட்டணி 15 -17 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும், இந்தியா கூட்டணி 11 முதல் 13 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், விஜய்யின் தவெக 1 முதல் 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் புதுவையில் பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் மீண்டும் என்.டி.ஏவே ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறி வருகின்றன. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி 16 முதல் அதிகபட்சமாக 25 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

புதுவை சட்டசபை தேர்தல்
அதே சமயம் தமிழகம் மட்டும் இன்றி புதுவையிலும் களம் காணும் விஜய்யின் தவெக 28 தொகுதிகளில் களம் இறங்கியுள்ளது. மீதமுள்ள 2 தொகுதிகளில் (உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி) கூட்டணிக் கட்சிக்கு ஆதரவு தந்துள்ளது. இதனால் விஜய் கட்சி எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என பலராலும் கவனிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இன்று வெளியாகி உள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் விஜய்க்கு அதிகப்பட்சமாக 2-4 தொகுதிகளை மட்டுமே பிடிக்கும் என கணித்துள்ளன. ஆனால் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் 0 இடங்களை தான் பிடிக்கும் என்றும் கணித்துள்ளன. இதனால் விஜய்யின் தாக்கம் புதுவையில் எதிரொலிக்கவில்லை என்பதையே இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டி வருகின்றன.
நூலிழையில் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ
JVC எக்ஸிட் போல் நடத்திய கருத்துக்கணிப்பில், புதுவையில் நூலிழையில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிவித்துள்ளது. புதுவையில் என்.டி.ஏ கூட்டணி 15 -17 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும், இந்தியா கூட்டணி 11 முதல் 13 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், விஜய்யின் தவெக 1 முதல் 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது.
மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 15 முதல் 17 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்துள்ளதால், நூலிழையில் தான் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்றும், காங்கிரஸ் டஃப் பைட் கொடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. எனவே அன்று யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிந்துவிடும்.
புதுவை - JVC எக்ஸிட் போல்
* என்.டி.ஏ கூட்டணி: 15 -17
* இந்தியா கூட்டணி: 11 முதல் 13
* தவெக: 1 முதல் 2
மொத்தம் 30 தொகுதிகள்
பெரும்பான்மைக்கு 16 தொகுதிகள் வேண்டும்.












Click it and Unblock the Notifications