"விஜய் ஒரு அரசியல் 0".. தவெகவிற்கு எதிராகத் திரண்ட 'என்.டி.ஏ' கூட்டணி.. அதிமுகவின் பெல்ட் ட்ரீட்மென்ட்
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) விமர்சனங்களுக்கு அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தலைவர்கள் ஒன்றிணைந்து கடும் பதிலடி கொடுத்துள்ளனர். பொதுவாக திமுக மீது விஜய் எவ்வளவு விமர்சனங்கள் வைத்தாலும் திமுக அதை கண்டுகொண்டது இல்லை. ஆனால் அதிமுக முதல் விமர்சனத்திற்கே.. விஜயை மிக கடுமையாக விமர்சனம் செய்து அட்டாக் செய்து வருகிறது.
அ.தி.மு.க-வை 'ஊழல் கட்சி' என விஜய் விமர்சித்த மறுதினமே, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைவர்கள் ஒன்றிணைந்து அவர் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

"விஜய் ஒரு அரசியல் ஜீரோ" - தமிழிசை சௌந்தரராஜன்
பா.ஜ.க-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விஜய்யை கடுமையாகச் சாடினார். "அரசியலில் விஜய் ஒரு 'ஜீரோ'. தனது நடிப்புத் தொழிலைத் தியாகம் செய்துவிட்டு அரசியலுக்கு வந்ததாக அவர் கூறுவது அவரது அனுபவமின்மையைக் காட்டுகிறது. நான் ஒரு மருத்துவராக எனது தொழிலைத் தியாகம் செய்துதான் அரசியலுக்கு வந்தேன். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியும் (அண்ணாமலை) தனது பதவியைத் துறந்துதான் பா.ஜ.க-வில் இணைந்தார். விஜய்யின் விமர்சனங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது," என்று அவர் கூறினார்.
"சினிமா டிக்கெட் விலையே ஊழல்" - டி.டி.வி. தினகரன்
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறுகையில், "150 ரூபாய் டிக்கெட்டை 1,000 ரூபாய்க்கும் 2,000 ரூபாய்க்கும் விற்பது கூட ஊழல்தான். முதலில் அவர் தனது 'பண்ணையார்' மனோபாவத்திலிருந்து வெளியே வரட்டும். ஊடகங்களைச் சந்தித்து வெளியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்," என விமர்சித்தார்.
"விஜய் வெறும் பில்டப்" - செல்லூர் கே. ராஜு
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விஜய்யின் பேச்சுகள் வெறும் 'பில்டப்' (Hype) மட்டுமே. அ.தி.மு.க-வை எதிர்க்கும் பலம் தவெக-விடம் இல்லை. விஜய் ஒரு 'ஸ்பெஷல் ஷோ' போன்றவர், அது நீண்ட காலம் நீடிக்காது. உண்மையான போட்டி தி.மு.க-விற்கும் அ.தி.மு.க-விற்கும் இடையேதான். விஜய்க்குப் பெரும் ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் வெற்றுப் பேச்சுகள்," என்று எள்ளி நகையாடினார்.
அ.தி.மு.க-வின் எச்சரிக்கை
அ.தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சி. சீனிவாசன் கூறுகையில், விஜய்யின் மீதான இந்தத் தாக்குதல் ஒரு தொடக்கம்தான் என்றும், வரும் நாட்களில் இன்னும் கடுமையான விமர்சனங்கள் வரும் என்றும் எச்சரித்தார். முன்னதாக அ.தி.மு.க ஐடி விங் வெளியிட்ட அறிக்கையில், விஜய் 'தற்பெருமை பேசும் சுபாவம்' (Narcissistic behaviour) கொண்டவர் என்றும், அவரது அரசியல் ஆபத்தானது என்றும் குறிப்பிட்டிருந்தது. நேத்து நீங்க பார்த்தது மாஸ்டர் படம் உண்மை சம்பவம் இப்ப நீங்க பார்க்கிறது தலைவா படம் உண்மை சம்பவம் நாளைக்கு நீங்க பார்க்கப்போவது தெறி படம் உண்மை சம்பவம் என்றெல்லாம் அதிமுக இன்னொரு பக்கம் வீடியோவும் வெளியிட்டு விஜயை தாக்கி வருகிறது.
தவெக-வின் பதில்
இந்தக் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள தவெக நிர்வாகிகள், "விஜய்யின் அரசியல் எழுச்சியைக் கண்டு எதிர்க்கட்சிகள் அரண்டு போயுள்ளன. அவர்கள் பயப்படுவதையே இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன," என்று தெரிவித்துள்ளனர்.
திராவிட மற்றும் தேசியக் கட்சிகள் அனைத்தும் விஜய்க்கு எதிராக அணிவகுத்து நிற்பது, 2026 தேர்தல் களம் விஜய்க்குப் பெரும் சவாலாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications