சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"முருகனை" தேடி வந்த "ஜான் ஜோசப்".. கூடவே 150 பேரும்.. பாஜகவின் கலர் படு வேகமாக மாறுதே!

தமிழக பாஜகவில் 150 கிறிஸ்தவர்கள் இணைந்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: கிறிஸ்தவர்கள் சிலர் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.. இது பாஜகவின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவும், மதசார்பற்ற கட்சி என்ற பெயரை எட்டிப்பிடிப்பதாகவும் அமைந்து வருகிறது.
தமிழகத்தில் சமீபகாலமாக பாஜக தனது கட்சியை வலுவாக்கும் விஷயங்களை செய்துவருகிறது. இது ஒரு விவாதத்தையே அரசியல் கிளப்பி வருகிறது.. பாஜகவில் தொடர்ந்து நடிகர், நடிகைகள் இடம்பெறுவது வெறும் கவர்ச்சி அரசியலையே பிரதிபலிக்கிறது என்ற கருத்தும் பதிவாகி வருகின்றன.

அதேசமயம், "அன்னைக்கு இருந்த பாஜக வேற.. வெறும் சினிமாக்காரர்கள் பாஜகவில் இணைகிறார்கள் என்று மட்டும் எப்படி சொல்லலாம்? ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. அதனால் எல்லா தரப்பு மக்களின் ஆதரவையும்தான் பாஜக பெற்று வருகிறது" என்று பாஜக தரப்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

 Nearly 150 Christians join BJP

இந்த சூழலில்தான், திடீரென திருமாவளவனின் மனுஸ்மிருதி விவகாரம் வெடித்தது.. இதற்கு பிறகு திருமாவுக்கு எதிராக இந்துக்கள் பெருகிவிட்டதாக பாஜக தரப்பு சொல்லி வருகிறது.. அதற்கேற்றார்போல், சில விசிகவினர் பாஜகவிலேயே இணைந்தும் விட்டனர். மற்றொரு பக்கம் திமுக, அதிமுகவில் இருந்தும் அதிருப்தியாளர்கள் பாஜக பக்கம் தாவி வருகிறார்கள்.

திடீர்னு என்னாச்சு.. முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லையா.. பாஜக தலைவர்கள் சொல்வது என்ன..?திடீர்னு என்னாச்சு.. முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லையா.. பாஜக தலைவர்கள் சொல்வது என்ன..?

தற்போது கிறிஸ்தவர்களும் பாஜகவில் இணைந்துள்ளனர்.. சர்வதேச சுயாதீன திருச்சபை பேராயத்தை சேர்ந்த சுமார் 150 கிறிஸ்தவர்கள் பேராயர் ஜான் ஜோசப் தலைமையில் பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

பாஜக இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இப்படி கிறிஸ்தவர்கள் பாஜகவில் இணைந்து வருவது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

English summary
Nearly 150 Christians join BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X