Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு.. டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழா இன்று நடந்தது. டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், கோப்புகளில் கையெழுத்திட்டு வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இருப்பினும், இந்த நிகழ்ச்சியில் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் 8 அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாகத் தமிழக டிஜிபியாக பொறுப்பு இருந்தவர் சங்கர் ஜிவால். சைலேந்திர பாபு 2023ல் டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற போது, சங்கர் ஜிவால் அந்தப் பதவிக்கு வந்தார். அவரது பதவிக்காலம் இன்று ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேநேரம் நேற்றும் இன்றும் விடுமுறை நாள் என்பதால் அவர் ஆகஸ்ட் 29ம் தேதியே பணி ஓய்வு பெற்றார்.

Nearly Eight DGP ranked IPS officers did not participate in G Venkatraman ceremony says Reports

10 ஐபிஎஸ் அதிகாரிகள்

சங்கர் ஜிவாலை தொடர்ந்து புதிய டிஜிபி யார் என்பதில் கேள்வி எழுந்தது. டிஜிபி பதவிக்கு நியமிக்கப்படுபவர், குறைந்தபட்சம் 6 மாதங்கள் பதவியில் இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி டிஜிபி ஓய்வு பெற மூன்று மாதங்களுக்கு முன்னரே, 10 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பும். அதில் இருந்து மூவரை யுபிஎஸ்சி அமைப்பு மாநில அரசுக்குப் பரிந்துரைக்கும்.. அதில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமிக்கலாம்.

பதில் இல்லை

தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கனவே இந்தப் பட்டியல் அனுப்பப்பட்டுவிட்டது. இருப்பினும், இதுவரை பரிந்துரை எதுவும் வரவில்லை. தமிழக அரசு அனுப்பிய பட்டியலில் சீமா அகர்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் வாங்கடே, சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப் பெருமாள், ராஜீவ் குமார், மகேஷ் குமார் அகர்வால், சஞ்சய் மாத்தூர் உள்ளிட்ட 10 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் இடம்பெற்று இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம் யுபிஎஸ்சி அமைப்பிடம் இருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை.

வெங்கட்ராமன்

இதையடுத்து வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் ஜி.வெங்கட்ராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் சங்கர் ஜிவால் பொறுப்புகளை ஒப்படைத்தார். இருப்பினும், சட்ட ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பதவியேற்ற இந்த நிகழ்ச்சியில் பல மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது.

புறக்கணிப்பு

குறிப்பாக டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் 8 அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மூத்த அதிகாரிகளான சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங், வன்னிய பெருமாள் உட்பட எட்டு அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தமிழக அரசு அனுப்பிய ஐபிஎஸ் அதிகாரிகள் லிஸ்டில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஏன் வெங்கட்ராமன் பதவியேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.

இப்போது டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள ஜி.வெங்கட்ராமன் தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். பி.ஏ. (வணிகவியல்), எம்.ஏ. (பொது நிர்வாகம்) படித்துள்ள வெங்கட்ராமன், 1994 தமிழக கேடரில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+