நீட் தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி.. முதலிடம் பிடித்த மாணவர் யார்?
டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சியை பெற்றுள்ளனர். மொத்தமாக சுமார் 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில், 5.14 லட்சம் மாணவர்களும், 7.22 லட்சம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் அகில இந்திய அளவில் டாப் 10 இடங்களை பிடித்த மாணவர்களையும் பார்க்கலாம்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தமிழ்நாடு தொடர்ச்சியாக எதிர்த்து வந்தாலும், நீட் தேர்வு கட்டாயமாக நடக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

நீட் தேர்வு
இந்த நிலையில் 2025-26 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.
முடிவுகள் வெளியீடு
தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் டாப் 100 இடங்களுக்குள் பிடித்து அசத்தி இருக்கின்றனர். சூர்யநாராயணன் என்ற மாணவர் தேசிய அளவில் 27வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்து அசத்தி இருக்கிறார். நீட் தேர்வை பொறுத்தவரை தேர்வு எழுதிய 22.7 லட்சம் மாணவர்கள், 12.36 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் அசத்தல்
மொத்தமாக 5 லட்சத்து 14 ஆயிரத்து 63 மாணவர்களும், 7 லட்சத்து 22 ஆயிரத்து 462 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் மூன்றாம் பாலினத்தவர்களில் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறார். அதேபோல் மாணவிகளில் டெல்லியை சேர்ந்த அவிகா அகர்வால் முதலிடம் பிடித்திருக்கிறார்.
முதலிடம் யார்?
தேசிய அளவில் அவிகா அகர்வால் 5வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் டாப் 4 இடங்களை மாணவர்கள் பெற்று அசத்தி இருக்கின்றனர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த உட்கர்ஷ் அவாதியா 2வது இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த க்ரிஷன்ஹ் ஜோஷி 3வது இடத்தையும், டெல்லியைச் சேர்ந்த மிரினல் கிஷோர் ஜா 4வது இடத்தையும், அவிகா அகர்வால் 5வது இடத்தை பிடித்துள்ளனர்.
டாப் 10 பட்டியல்
அதேபோல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜெனில் வினோத்பாய் பயானி 6வது இடத்தையும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கேசவ் மிட்டல் 7வது இடத்தையும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜா பவ்யா சிராஜ் 8வது இடத்தையும், டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷ் கெடாவத் 9வது இடத்தையும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆரவ் அகர்வால் 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications