எல்லாம் "இரட்டை வேஷம்".. திடீரென பாஜக மீது பாயும் அதிமுக மைத்ரேயன்.. செம ட்விஸ்ட்.. என்ன நடந்தது?
சென்னை: நீட் விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் அணிந்துள்ளது, பாஜக மாநில அரசின் உரிமைக்கு எதிராக பாஜக செயல்படுவதாக அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்பிக்கள் கொஞ்சம் கொஞ்சமாக திமுக பக்கம் தாவ தொடங்கி உள்ளனர். அதிமுக முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்பி சுந்தரம், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் திமுகவில் இணைந்து வருகிறார்கள்.
வரிசையாக அதிமுகவில் இருந்து ஒவ்வொருவராக திமுக பக்கம் தாவ தொடங்கி உள்ளனர். அதிமுக தரப்பை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கூட்டணி கட்சியான பாஜகவிற்கு எதிராக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பரபரப்பு
நீட் தேர்வில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மைத்ரேயன், நீட் தேர்வு குறித்து ஒரு குழு அமைப்பதற்குக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று பாஜக சொல்வது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிப்போம் என்று பாஜக சட்டசபையில் கூறியது. ஆனால் இப்போது நீட் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.

வழக்கு
நீட் தேர்வில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. பாஜகவின் இரட்டை நிலையை இது காட்டுகிறது. இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல். மாநில அரசின் அதிகாரங்களை குறைக்கும், பறிக்கும் வகையில் இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

பாஜக செயல்
தமிழ்நாடு கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று மைத்ரேயன் குறிப்பிட்டு இருக்கிறார். அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக இவர் பெரிய அளவில் ஓரம்கட்டுப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு எதிராக இவர் பேசி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்எஸ்எஸ்
தொடக்க காலத்தில் தனது அரசியல் பயணத்தை ஆர்எஸ்எஸ் மூலம் தொடங்கியவர். அதன்பின் 2000 வரை பாஜகவில் இருந்தவர் பின் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் மைத்ரேயன் பாஜகவிற்கு எதிராக பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications