கடும் சோதனை.. நாடு முழுவதும் துவங்கிய ‛நீட்’ தேர்வு.. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று மதியம் துவங்கியது. தமிழ் உள்பட 13 மொழிகளில் நடைபெறும் தேர்வை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். வழக்கம்போல் தீவிர சோதனைக்கு பிறகு மாணவ-மாணவிகள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் மருத்துவ படிப்பு பயில நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுத வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் உள்ள போதிலும் தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் மே 7 ல் (அதாவது இன்று) நடைபெறும் நீட் தேர்வுக்கு ஏற்கனவே மாணவ-மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. அதில் மாணவ, மாணவிகள் எந்த நகரத்தில் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தியா முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் 14 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் படித்தவர்களாவாக உள்ளனர். மணிப்பூரில் இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் அங்கு இன்று நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் மணிப்பூரை தவிர்த்த இந்தியாவின் பிற பகுதிகளில் இன்று மதியம் நீட் தேர்வு துவங்கியது. மொத்தம் 499 நகரங்களில் நீட் தேர்வு துவங்கியது. மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இன்றைய நீட் தேர்வு என்பது தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வை பொறுத்தமட்டில் மாணவ-மாணவிகள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த முறையும் அது தொடர்ந்தது. கடும் சோதனைக்கு பிறகே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீட் தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள்செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீட், சிபிஎஸ்இ குளறுபடிகள்! நாங்கள் நடத்துவது அமைதி போராட்டம்தான்! கரப்பான் பூச்சி கட்சி விளக்கம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications